SIGAI ALANGARAM – சிறிய மற்றும் நீள கூந்தலுக்கான ஃபெதர் வகையிலான சிகை அலங்காரங்கள்

ஃபெதர் கட் முடிகள் என்றுமே தனி அழகு சேர்ப்பவை. முடியின் நீளம் எதுவாக இருந்தாலும், ஃபெதர் கட்டின் மூலம் அடர்த்தியைக் கொஞ்சம் கூட்டிக் காட்ட முடியும். உங்கள் முடியை வண்ணமயமாக கலர் செய்யவும், இந்த முறை சிறந்தது.

இங்கே ஃபெதர் முறையில் உள்ள முடிகளில் செய்யக் கூடிய, சில அற்புதமான சிகை அலங்காரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து, அழகுக்கு மெருகேற்றுங்கள்.

குட்டை முடிகளுக்கான அலங்காரம் (Feather cut hairstyles for short hairs)

குட்டை முடிக்கு அழகிய பாப் (Short feather haircut bob)

Short feather haircut bob

உங்களுடையது நீள்வட்ட முகமா? உங்களுக்கு கொஞ்சம் அலட்டலான அலங்காரங்கள் பிடிக்குமா? அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற அலங்காரம் இந்த பாப் அலங்காரம். பின்னே மிகவும் குட்டையாக இல்லாமலும், முன்னே மிகவும் அழகாகவும் காட்சி தரும் இந்த அலங்காரம். உங்கள் முடியை வெள்ளி அல்லது செம்பட்டை நிறத்திலும் கூட கலர் செய்து, அழகைக் கூட்டலாம்.

இளஞ்சிவப்பு குட்டை முடி (Auburn blush short feather hairstyle)

Auburn blush short feather hairstyle

ஃபெதர் உலகின் உச்சமாக இருக்கும் இந்த அலங்காரத்தைப் பயன்படுத்தி, உங்களின் அழகைக் கூட்டுங்கள். குட்டையான முடியில் பாப் செய்து, அதில் ஃபெதர் முறையில் வெட்டுங்கள். சவால்களை எதிர்நோக்கும் பெண்ணாக நீங்கள் இருக்கும் பட்சத்தில், இந்த வகை அலங்காரத்தில் புதுமையாகவும், தனித்தன்மையுடனும் திகழலாம்.

இளஞ்சிவப்பு ஹிப்பி அலங்காரம் (Auburn brunt hippie feather short hairstyle)

Auburn brunt hippie feather short hairstyle

உங்களது குறும்புப் பான்மையை வெளியே கொண்டு வந்து, காணும் எல்லோரையும் கவர, இந்த ஹிப்பி அலங்காரத்தைப் பயன்படுத்துங்கள். நீண்ட தூரப் பயணம், இசை விழாக்கள் போன்றவற்றிற்கு இந்த வகை அலங்காரம் சிறப்பு சேர்க்கும்.

ஒரு பக்கம் வழித்த குட்டை ஃபெதர் (One side swept short feather)

One side swept short feather

இளம் பெண்களுக்கென பிரத்யேக அலங்காரம் இந்த ஒன்று. இந்தச் சீரில்லாத குட்டை முடியில் ஆங்காங்கே தெளித்தாற் போல் கலர்கள் செய்வது இன்னும் அதிக கண்களை உங்கள் பக்கம் திருப்பும்.

கலைந்த குட்டை ஃபெதர் (Messy short feather hairstyle)

Messy short feather hairstyle

இந்த வகை கலைந்த குட்டை முடி, பராமரிப்பிற்கு மிகவும் எளிதானது. எந்த வகை ஆடைக்கும் பொருந்தும். உங்களை ஒரு தைரியமான தோற்றத்தில் காண்பிக்க, இந்த அலங்காரம் சிறப்பாக உதவும்.

கிராப்பு முடியில் நேரான ஃபெதர் (Straight feather cut on cropped hairs)

Straight feather cut on cropped hairs

கலைந்த ஃபெதர் அலங்காரத்தில் இருந்து, இது சற்றே மாறுபட்ட ஒரு அலங்காரம். இருந்தாலும், இந்த அலங்காரம் கல்லூரிப் பெண்களுக்கும் உயர் பதவில் இருக்கும் பெண்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

முன் முடிகள் விட்ட குட்டை ஃபெதர் (Short feather cut with front fringes)

Short feather cut with front fringes

சீரான ஃபெதர் கட்டான இந்த அலங்காரம் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு அலங்காரம். இளம் பெண்கள் மட்டுமல்லாது, வயது முதிர்ந்த பெண்களுக்கும் கூடப் பொருந்தும். நெற்றி முன்னால் முடியின் அடர்த்தி குறைந்து காணப்படும் பிரச்சனை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும். இந்த வகை அலங்காரம் அந்தப் பிரச்சனையை முற்றிலும் அகற்றும்.

நேரான சீரான பாபில் ஃபெதர் (Feather cut on straight symmetric bob)

Feather cut on straight symmetric bob

உங்களுக்கு வட்ட முகமா? அப்படியானால் இந்த சீரான பாப் வகை முடியைக் கொண்டு, உங்கள் முகத்தை நீள்வட்டமாகக் காட்டுங்கள். ஆங்காங்கே சில செம்பட்டைக் கலர் உபயோகித்தால், முகத்திற்கு அதிக கவர்ச்சியைக் கொடுக்கும். 20-30 வயதுடைய பெண்களுக்கு இந்த அலங்காரம் சிறப்பாகப் பொருந்தும்.

கலந்த அடுக்குகள் கொண்ட ஃபெதர் (Mixed layered short hairstyle with feather cut)

Mixed layered short hairstyle with feather cut

நீள மற்றும் நீள்வட்ட முகத்தினை உடைய பெண்களுக்கு இந்த அலங்காரம் சிறப்பாகப் பொருந்தும். அதிக வயதுடைய பெண்களுக்கு இது மிகவும் கச்சிதமாகப் பொருந்தும். ஆங்காங்கே கலர் செய்தாலும், இந்த அலங்காரம் சிறப்பாகக் காட்சி தரும்.

அளவான முடியில் செய்து கொள்ளக் கூடிய ஃபெதர் (Feather cut hairstyles for medium hairs)

ஃபெதர் பாப் (Feather bob blond medium hairstyle)

Feather bob blond medium hairstyle

மிகவும் அழகான, கண்ணைக் கவரக் கூடிய இந்த அலங்காரம் உங்கள் நளினத்தைப் பன்மடங்கு எடுத்துக் காட்டும். 90-களில் இருந்த அதிரடியான சிகை அலங்காரமாகிய இது, வெள்ளை முடி கொண்ட மகளிரிடத்தில் பிரசித்தி பெற்றது. அடுக்குகள் கொண்ட பாப் முடியில் செய்யும் இந்த ஃபெதரானது, தேநீர் விருந்துகள், விளையாட்டு விழாக்கள் போன்றவற்றிற்குக் கச்சிதமாகப் பொருந்தும்.

தேன் தெளித்த அளவான அடுக்குகள் (Honey kissed medium layered feather hairstyle)

Honey kissed medium layered feather hairstyle

மிகவும் கவர்ச்சியான, அசாதாரணமான சிகை அலங்காரப் பிரியையா நீங்கள்? அப்படியானால், இந்த அலங்காரம் நீங்கள் நிச்சயம் விரும்பி அணியும் ஒன்றாக இருக்கும். தினசரி செய்து கொள்ளவும், வித்தியாசமாகவும் உங்களைக் காட்டுவதில் ஃபெதர் கட் ஒரு முக்கியப் பங்கினை வகுக்கிறது. அப்படிப்பட்ட இந்த அலங்காரத்தை உங்கள் முக்கிய சந்திப்புகள், கல்லூரி விழாக்கள் என அணிந்து அசத்துங்கள்.

சுருள் விழுந்த அளவான ஃபெதர் (Blonde curly tresses medium feather hairstyle)

Blonde curly tresses medium feather hairstyle

அந்தக் காலத்து, உன்னதமான நேரங்களை நினைவு கூறும் விதமாக, இந்த எளிமையான ஆனாலும் கவர்ச்சியான அலங்காரத்தைத் தேர்வு செய்யுங்கள். ஃபெதரும் அதனுடன் செய்யப்பட்டிருக்கும் சீரில்லா அடுக்குகளும், ஒரே மாதிரியான அலங்காரத்திலிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும்.

நேரான ஃபெதர் (Straight feather cut with side bangs)

Straight feather cut with side bangs

அளவான முடிகளில் ஃபெதர் கட் செய்தால் அது மிகவும் அழகாகக் காட்சி தரும். உங்கள் முடியின் அளவைக் குறைக்காமல், ஃபெதர் செய்ய இது ஒரு சிறந்த அலங்காரமாகும். பக்கவாட்டில் விடும் அந்தக் கற்றைகள் அழகுக்கு மெருகூட்டும்.

அலைகள் கொண்ட அடுக்குகள் (Wavy layered hairstyle with feathered bangs)

Wavy layered hairstyle with feathered bangs

சுருள் முடியில் என்ன செய்வது என்ற கவலையா? அப்படியானால் இந்த அலங்காரத்தை முயற்சி செய்து பாருங்கள். ஃபெதர் செய்த கற்றைகள், அகன்ற முன் நெற்றியை மறைப்பதோடல்லாமல், உங்களுக்கு ஒரு அழகான தோற்றத்தையும் பெற்றுத் தரும்.

அடுக்குகள் கொண்ட வெளிப்புற ஃபெதர் (Layered and outward feather cut)

Layered and outward feather cut

அளவான முடியில் இந்த வெளிப்புற ஃபெதர் மிகவும் கச்சிதமாக இருக்கும்.அதோடல்லாமல், இது முடியின் அடர்த்தியை அதிகமாக்கிக் காட்டும். இந்தக் காரணத்தினால், இது இளம் பெண்களுக்குக் அதிகம் பிடித்த அலங்காரமாகும்.

கலைந்த ஃபெதர் (Messy feather cut for medium hair length)

Messy feather cut for medium hair length

இந்த வகை அலங்காரத்தில், சில முடிகள் உட்புற வெட்டுடனும், சில முடிகள் வெளிப்புற வெட்டுடனும் காட்சியளிக்கும். இதனால், முடியின் அடர்த்தி அதிகமாவதுடன், கவர்ச்சியாகவும் இருக்கும். நீளமான முன் கற்றைகள், அகன்ற நெற்றியை மறைக்கும். நீள அல்லது நீள் வட்ட முகத்தை உடைய பெண்கள் இந்த அலங்காரத்தினால் வட்ட முகத்தில் உலா வரலாம். வயது அதிகம் உடைய பெண்களுக்கும், இந்த அலங்காரம் சிறப்பாகப் பொருந்தும்.

நேரான ஃபெதர் (Symmetrical feather cut for medium hairs)

Symmetrical feather cut for medium hairs

முடியில் ஏதேனும் புதுமை செய்ய எண்ணமா? இந்த அழகான, எளிய பராமரிப்புடைய ஃபெதர் கட்டைச் செய்து பாருங்கள். அளவான முடியில் செய்து கொள்ளக் கூடிய, இளம் பெண்களுக்குப் பொருந்துக் கூடிய அலங்காரம் இந்த அலங்காரம்.

மொன்னை ஃபெதர் (Blunt feather cut with highlights)

Blunt feather cut with highlights

மொன்னையாக இருக்கும் ஃபெதருடன் சில கலரிங்கும் செய்தால், கல்லூரி செல்லும் பெண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். எளிதில் பராமரிக்கவும் இந்த அலங்காரம் சிறந்தது.

வெளிப்புற ஃபெதர் (Outward feather with bangs on medium length hair)

Outward feather with bangs on medium length hair

முன் கற்றைகள் கொண்ட, வெளிப்புற ஃபெதருடைய இந்த அலங்காரம், கல்லூரி செல்லும் இளம் பெண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும். கலைந்தும், சாதாரணமான அழகையும் உடைய இந்த அலங்காரம் நிச்சயம் உங்கள் தோற்றத்தை எடுத்துக் காட்டும். தோற்றத்தில் வித்தியாசப் படுத்தும் ஆளாக நீங்கள் இருந்தால், நிச்சயம் இதை முயற்சிக்கவும்.

சீரில்லாத ஃபெதர் (Asymmetrical feathers on medium hairs)

Asymmetrical feathers on medium hairs

சீரில்லாத ஃபெதருடன் இருக்கும் இந்த அலங்காரம் மிகவும் நேர்த்தியான ஒன்று. கச்சிதமாக0க் கலரிங் செய்தால், மிகவும் அழகாக இருக்கும். 20 வயதிற்கும் கீழுள்ள இளம் பெண்களுக்கு அழகாகப் பொருந்தும்.

முகச்சட்டம் கொண்ட ஃபெதர் (Feather cut with face framing highlight)

Feather cut with face framing highlight

இந்த வகை அலங்காரத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால், முடியின் அநேக பாகங்கள் உட்புற ஃபெதரிலும், பக்கவாட்டுக் கற்றைகள் வெளிப்புற ஃபெதருடனும் இருக்கும். லேசாக செய்யப்படும் கலரிங், முகத்திற்குச் சட்டம் போல் அமைந்து, அட்டகாசமான ஒரு தோற்றத்தைத் தரும்.

நீளமான முடியில் செய்யக்கூடிய அலங்காரங்கள் (Feather cut hairstyles for long hairs)

கற்றைப் பகுதிகள் கொண்ட ஃபெதர் (Feather cut hairstyle with sectioned Bangs)

Feather cut hairstyle with sectioned Bangs

குளிர் காலத்தில் செய்யக்கூடிய அழகான அலங்காரம். சிறந்த அழகைப் பெற, சிகை அலங்காரத்தில் தேர்ந்த ஒருவரிடம் செல்வது நல்லது. முகத்தின் முன் புறம், குழந்தைகளுக்கு இருப்பது போல் செய்ய வேண்டும். பிறகு இங்கே கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று செய்ய வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். உங்களை நேர்த்தியாகவும் அழகாகவும் எடுத்துக் காட்ட, இது ஒரு பொருத்தமான அலங்காரமாகும்.

கவர்ச்சியான அடுக்குகள் கொண்ட ஃபெதர் (Glam game blonde layered feather hairstyle)

Glam game blonde layered feather hairstyle

கவர்ச்சியான பிரபலங்களைப் போல் உங்களை அலங்கரித்துக் கொள்ள இந்த அலங்காரம் சிறப்பாக உதவும். pஅல அடுக்குகள் கொண்ட முடியில் ஃபெதர் செய்து உங்கள் கவர்ச்சியையும் நேர்த்தியையும் எடுத்துக் காட்டலாம். பார்ப்பவரை நிச்சயம் கவர்ந்திழுக்க்க் கூடிய அலங்காரமாக இது திகழும்.

கடல்லைகள் போன்ற ஃபெதர் (Feather cut on long beachy waves)

Feather cut on long beachy waves

நீளமான முடியில் லேசான சுருள்கள் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களை என்றும் அழகாகக் காட்டும் இந்த வகை அலங்காரம். இதன் சிறப்பு என்னவென்றால், நீளமான கற்றைகள் உட்புறமாகவும், முகத்தின் அருகில் இருக்கும் குறைந்த அளவு முடிகள் வெளிப்புறமாகவும் சுருட்டப்பட்டிருக்கும். இளம் பெண்களுக்கு அழகை அள்ளித் தரும்.

லேசான ஃபெதர் (Soft feather cut on long hairs)

Soft feather cut on long hairs

உங்களுக்கு மிகவும் நீளமான முடி இருக்கிறதென்றால், அதனுடன் இந்த வகையில் மிதமான ஃபெதரில் முனைகளை அலங்கரித்தால், மிகவும் பொருத்தமாக இருக்கும். உங்களின் தோற்றத்தை மட்டுமல்லாது, உங்கள் முடியின் அடர்த்தியையும் கூட்டிக் காட்டும். சுருள்கள் இல்லாத மிகவும் நீளமான கூந்தலை உடைய பெண்களுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும்.