Tamil tips to get beautiful breasts – அழகான மார்பகங்களை பெற குறிப்புகள்

மார்பகங்கள் பெண்மையின் ஒரு முக்கிய உடல்பாகம். அழகான மார்பகங்களைப் பெறுவதற்கான குறிப்புகள் கீழே கொடக்ககப்பட்டுள்ளன. மனித இனம் ஆண் மற்றும் பெண் என இரு பாலாக உள்ளது. ஆணின் உடல் அழகு என்பது கட்டுமஸ்தான உடலைக் குறிக்கிறது. அதே போல் பெண்களின் உடல் ஆண்களிலிருந்து வேறுபடுவதில் சில உடல் பாகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

உடற்கூறு அமைப்பில் ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கிய உடல் பாகம்தான் இந்த மார்பகங்கள். ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகங்கள் அழகாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள் ஏனெனில் தன் சக தோழிகள் மற்றும் உடன் வேலைபார்க்கும் பெண்களின் மார்பு அழகாக இருக்கும்போது தன் மார்புகளும் அழகாக இருக்கவேண்டும் என்று இயற்கையாகவே பெண்கள் விரும்புகின்றனர். தொங்குகின்ற மார்பகங்களை யாரும் விரும்புவதில்லை அதேபோல் மிகச்சிறிய மார்பகங்களையும் பெண்கள் விரும்புவதில்லை. உடலுக்கு ஏற்றவாறு சரியான அளவில் மார்பும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாக உள்ளது.

ஏற்கனவே சொன்னது போல் ஆணின் உடலிலிருந்து பெண் உடலை வேறுபடுத்திக் காட்டுவதில் முதன்மையானது பெண்ணின் மார்பகங்கள். இது அழகின் அரு அம்சமாக கருதப்படுகிறது. மேலாடை அணியும்போது ஆடையின் கழுத்துப்பகுதி கீழாக இருக்கமாறு இன்றைய நவநாகரீகமாக உள்ளது. அதனால் பெண்களின் மார்பக பிளவுகள் தெரிவது அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் சில பெண்கள் தங்கள் மார்பு அழகாக இல்லை என்று நினைக்கிறார்கள்அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை. அழகான மார்பகங்களை எப்படி பெறுவது என்ற சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.

எளிமையான சில குறிப்புகள் (Simple tips to flaunt gorgeous breasts)

  • வெந்நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீர் மற்றும் வெதுவெதுப்பான நீராக மாறி மாறி வரும்படியான ஷவரில் குளிப்பதால் மார்பகங்களின் திடத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
  • மார்பக தசைகளை வலிமையாக்கும் சில உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்ய வேண்டும். புஸ்அப், டம்பெல் உடற்பயிற்சிகள் உள்ளன.
  • எப்போதுமே பெண்கள் உட்காரும்போதும் நிற்கும் போதும் நேராக உட்காருதல் மற்றும் நேராக நிற்கப் பழகவேண்டும். சரியான முறையில் உட்காருதல் மற்றும் நிற்பது பெண்களின் மார்பக அளவை சரியாக்குகிறது. நேராக நடந்து பழகுங்கள் மற்றவர்களின் பார்வையைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
  • வெயில் நேரடியாக உங்கள் மார்பில் படுவதை தவிர்த்திடுங்கள்புறஊதாக்கதிர்களின் ஊடுறுவலால் மார்பகங்களின் வடிவில் மாற்றம்
    ஏற்படலாம்.
  • குப்புறபடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனால் மார்பங்கள் தொங்கும் நிலை ஏற்படலாம்.
  • கருப்பு நிற உள்ளாடை அணிவதைத் தவிர்க்கலாம். இது சூரிய ஒளியை நேரடியாக உறிஞ்சும் மற்றும் இவ்வாறு சூரிய ஒளியின் வெப்பம் நேரடியாக கருப்பு உள்ளாடைகளால் ஈர்க்கப்படுவதால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. எனவே கருப்பு நிறமல்லாத வகையில் உள்ளாடைகளைத் தேர்வு செய்யலாம்.
  • அதே போல் உள்ளாடைகள் பார்க்க அழகாக இருக்கிறது என்பதை விட சரியாக மார்பகத்தில் பொருந்துகின்ற வகையிலான உள்ளாடைகளையே தேர்வு செய்ய வேண்டும் .கயிறு இருக்கும் உள்ளாடைகளை அதிக நேரம் அணியக் கூடாது.
  • நல்ல மென்மையான அதே சமயம எடுப்பான மார்பகங்களுக்கு,மார்பக மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக ஆலிவ் எண்ணைய் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்துவர வேண்டும். ஆலிவ் எண்ணையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மார்பகத்தில் இரத்த ஓட்டம் அதிகமாகி மார்பக வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
  • விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது புஸ்அப் உள்ளாடை அணிந்து செல்லலாம். இதனால் உங்கள் மார்பை எடுப்பாகக் காட்ட உதவும். சிலிக்கான் உள்ளாடைகள் சிலிக்கான் பேட் போன்றவையும் மார்பகத்தின் அளவை அதிகமாக்கிக்க காட்டும்.
  • அழகுசாதனப் பொருட்டகளில் ப்ரொன்சர் என்பவைகளைப் பயன்படுத்தினால் மார்பகங்கள் இன்னும் அழகாகத் தெரியும்.
  • சரியான மற்றும் முறையான சரிவிகித உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு இல்லையெனில் உடலில் எடை அதிகமாகி குறிப்பாக மார்பகங்களில் எடை அதிகமாகி மார்பகங்கள் தொங்க ஆரம்பித்துவிடும்புரதம், வைட்டமீன், தாதுப்பொருட்கள், சோடியம், பொட்டாசியம் என அனைத்து ஊட்டமும் இருக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும்.
  • நேராக உட்கார மற்றும் நிற்பதற்கு ஏற்ற உள்ளாடையை அணிய வேண்டும்.
  • உடல் எடையில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ள வேண்டும்.
  • குளித்து முடித்த பிறகு, தரமான சில எண்ணை அல்லது களிம்பு கொண்டு மார்பை மசாஜ் செய்ய வேண்டும்.
  • சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • நீச்சல் தெரிந்தவர்கள் வழக்கமாக நீச்சல் செய்துவருவதும் மார்பக தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.
  • மிக இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • சூரிய ஒளி நேரடியாக மார்பு மீது விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதற்கேற்ற உள்ளாடையை அணிய வேண்டும்.
  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வழக்கமாக பாதாம் எண்ணைய் கொண்டு மார்பை மசாஜ் செய்ய வேண்டும்.

அழகான மார்பைப் பெற குறிப்புகள் (Tips, ideas to get beautiful breasts)

ஈரப்பதத்தைக் காத்தல்(Moisturizing)

உடலில் மற்ற சருமப் பகுதிகளுக்கு எப்படி ஈரப்பதமாக வைத்திருக்கு களிம்பு திரவங்கள் தடவுகின்றோமோ அதே போல் மார்பு பகுதிகளிலும் சருமம் ஈரப்பதமாக இருக்க அதற்குரிய ஈரப்பத திரவங்களை வழக்கமா தடவி வரவேண்டும்.

புஸ்அப் உள்ளாடை (Push up bra)

மார்பு சரியான அளவாகவும் மற்றும் அழகாகவும் இருக்கவேண்டுமெனில் உங்கள் மார்பிற்கு ஏற்ற உள்ளாடை அணிவது மிக மிக அவசியம். சாதாரண உள்ளாடைகள் மார்பை தொங்கியவாறு ஆக்கும். ஆகவே புஸ்அப் உள்ளாடைகள் வாங்க வேண்டும். இவைகளில் மார்பை சுற்றி எல்லா இடங்களிலும் முறையாகத்தாங்க ஏதுவான அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெயருக்கேற்றவாறு இந்த உள்ளாடைகள் மார்பை கீழிருந்து மேல்நோக்கி தள்ளித் தாங்கும்.

நேரான நிலை (Back straight)

இருக்கைகளில் உட்காரும்போது முதுகு நேராக இருக்கும் படி உட்கார வேண்டும், நீங்கள் முதுகை சற்று வளைத்து உட்கார்ந்து வந்தால் முதுகு வலி பிரச்சனையும் வரும் மற்றும் மார்பின் அளவும் சீரற்று ஆகிவிடும்.

இரத்த ஓட்டம் (Blood circulation)

நீங்கள் அழகான வடிவான மார்பை விரும்பினால், உங்கள் மார்புப் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குளிக்கும் போது. ஆரம்பத்தில் வெதுவெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் குளிக்கும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மார்பில் இரத்த ஓட்டம் அதிகமாகும்போது ஆரோக்கியம் மேம்படும்.

உடற்பயிற்சி (Breast exercise)

நீங்கள் சில நேரங்களில் கவனித்திருக்கலாம் அதாவது மற்ற பெண்கள் நல்ல எடுப்பான மார்புடன் இருந்திருப்பார்கள் ஆனால் தற்போது பார்த்தால் சற்று தொங்கிய மார்பு போன்று தெரியலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் ஒருவர் மார்புக்கென தனியாக சில பயிற்சிகளைச் செய்துவந்தால் இப்படி சரிந்து தொங்கும் நிலையை மாற்றலாம். புஸ்அப் பயிற்சிகள் மற்றும் பென்ச் ப்ரஸ் பயிற்சிகள் செய்துவரலாம். உடற்பயிற்சி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டு அதன் படி பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.

சூரியஒளி பாதுகாப்பு களிம்புகள் (Application of sunscreen)

உங்கள் மார்பின் மேற்பகுதியில சூரிய ஒளி நேரடியாகப் பட்டு கருமையாவதையும் தடுக்கவேண்டும். இதற்கு நல்ல தரமான களிம்புகளை சந்தைககளில் வாங்கி, எப்பொழுதெல்லாம் பகல் பொழுதுகளில் வெளியே செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் இந்தக் களிம்பினை மார்பின் மேற்பகுதியில் பூசிக் கொள்ள வேண்டும்.