Tamil tips for tight breasts – மார்பை இறுக்க/அழகுபடுத்த இயற்கை வழிகள்

தொங்கு மார்புகள் உங்கள் உடல் அழகை பாதிக்கும் ஒன்று. வயது ஏற ஏற பொதுவாக பெண்களின் மார்புகள் தளர்வாக ஆரம்பிக்கும் ஆனால் சில தவறான பழக்கங்கள் மற்றும் எப்படி முறையாக பரிமாரிப்பது என்ற யோசனை இல்லாததும் சில இளம் பெண்களுக்கும் மார்பு தளர்வாக காரணமாகும்.

இளம் பெண்களே உங்கள் தளர்வான மார்பை சரிசெய்வது கத்தி மேல் நடப்பது போன்ற கடினமான விசயம் அல்ல, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில பழைய பழக்கங்களை விட்டுவிடுவது மற்றும் சில சிறப்பு கவனத்தை எடுத்துக் கொள்வத அவ்வளவுதான். இந்தக் கட்டுரையில் உங்களுக்காக மார்பு தளர்வை நீக்கும் சில இயற்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படியுங்கள்,

ஆலிவ் எண்ணைய் மசாஜ் (Olive oil massage)

மார்பு தளர்வைக் குறைக்க விரும்பினால் நீங்கள் ஆலிவ் எண்ணைய் மசாஜ் முயற்சிக்கலாம். சிறந்த முறையில் இது மார்பு இறுக்கத்தைக் கொடுப்பதுடன் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆலிவ் எண்ணையில் பேட்டி அமிலம் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது சருமப் பாதுகாப்பிற்கும் உதவும். சிறிளவு ஆலிவ் எண்ணைய் எடுத்து மார்பில் தடவி 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். இதன் மூலம் மார்பில் இரத்த ஓட்டம் அதிகமாகி தளர்வு குறையும். வாரத்திற்கு 4-5 தடவை இந்த மசாஜ் செய்யலாம்.

முட்டை மஞ்சள் கரு மற்றும் வெள்ளரி மசாஜ் (Egg yolk with the cucumber massage)

வெள்ளரிக்காயை முட்டை மஞ்சள் கருவுடன் நன்கு பிசைந்து பேஸ்ட் போலாக்கி அதனுடன் 1 தேக்கரண்டி க்ரீம் சேர்த்து கலந்த கலவை மார்பில் தடவி 30 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு தடவை இப்படி செய்து வந்தால் தளர்வான மார்பகம் இறுகி தளர்வு குறையும்.

சரியான தோரணை (Get the right posture)

நீங்கள் உட்காரும் போதும், நடக்கும் போது அல்லது உறங்கும் போதும் சரியான நிலையில் இருக்க வேண்டும். உங்கள் மார்பிற்கு அதிக அழுத்தம் தரும் வகையில் இருக்கக்கூடாது. இதனால் மார்ப தசைகள் தளர்வாகி மார்பு இறுக்கம் குறைந்து மார்பு தொங்கலாம். ஆகவே, நீங்கள் நிற்கும் போது, உட்காரும்போது, நடக்கும் போது உங்கள் முதுகும் தோளும் நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் தூங்கும் போது குப்புற படுப்பதை விட மல்லாக்கப் படுத்து தூங்குவதால் மார்பில் அதிக அழுத்தம் ஏற்படாது.

சரியான உள்ளாடை மற்றும் அதை அடிக்கடி மாற்றுதல் (Get the right bra and change it frequently)

உங்கள் மார்பின் அளவிற்கேற்ற சரியான உள்ளாடையைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான அளவில்லாத உள்ளாடை அணிவதாலே பெரும்பாலான பெண்களுக்கு மார்பு தளர்ந்து விடுகிறது. மார்பை சரியான முறையில் தாங்கும் சரியான அளவுள்ள உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். அழகாக இருக்கிறதே என்று பார்த்து வாங்கி விடக்கூடாது.

நாள் முழுவதும் அணியும் இந்த உள்ளாடை கண்டிப்பாக சரியான அளவானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள். அதே போல் நெடுநாட்களுக்கு ஒரு உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது. பாரப்பதற்கு நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும் சற்று பழசாகிவிட்டால் புதிய உள்ளாடை வாங்கிவிட வேண்டும். ஆகவே 3 மாதங்களுக்கு ஒரு முறை பழைய உள்ளாடைகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிதாக வாங்கி அணியுங்கள்.

மார்பு மசாஜ் (Breast massage for firm breasts)

சரியான முறையில் மார்பை மசாஜ் செய்வது மார்பு தளர்வு குறைந்து இறுக்கமாக மிக சிறந்த ஒரு பயிற்சி. ஆனால் சரியான முறையில் மசாஜ் செய்வது மிக அவசியம். மார்பின் அடியிலிருந்து வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் போது கைகளால் சற்று அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

இறுக்கமான மார்பிற்கு யோகா (Yoga for firmer breasts)

இளம் வயதிலேயே மார்பு தளர்வாகி தொங்குவதைத் தடுக்க சில யோகப் பயிற்சிகள் உதவும். உடலை நெறிப்படுத்தி ஒட்டுமொத்த உடற் ஆரோக்கியத்திற்கும் யோகா சிறந்தது. மேல் உடலை சீர்படுத்த உதவும் சில யோகப் பயிற்சிகள்.

புஜங்காசனம் (The cobra pose or bhujangasana)

cobra pose

இந்த ஆசனம் செய்வதற்கு குப்புறப்படுத்து, கால்களை நீட்டி கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் தோள்பட்டையை மேலே உயர்த்த வேண்டும். உங்கள் எடை தற்போது உங்கள் கைகள் தாங்கும். இந்த நிலையில் உங்கள் பார்வை மேற்கூரையைப் பார்த்து இருக்கும். இந்த நிலையில் சில வினாடிகள் அல்லது உங்களால் முடிந்த அளவு இருந்து பின்னர் மெதுவாக தோள்பட்டையை இறக்கி பழைய நிலைக்கு வாருங்கள். ஒரு நேரத்திற்கு 3 முறை இதைச் செய்ய வேண்டும்.

உஸ்த்ராசனம் (Ushtrasana or the camel pose)

camel pose

இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் முழங்காலிட்டு கால்கள் சற்று இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இப்போது உங்கள் உடலை மெதுவாக பின்புறமாக வளைத்து உங்கள் கைகளால் உங்கள் பாதங்களைத் தொட வேண்டும் படத்தில் காட்டியபடி. இறுதி நிலையில் உங்கள் உடல் நன்கு இழுத்து இருக்கும். இதே நிலையில் சில வினாடிகள் இருந்து பின் மெதுவாக உடலை முன்னோக்கி கொண்டுவந்து பழைய நிலைக்கு வரவேண்டும். ஒரு நேரத்திற்கு 3 முறை இப்படி செய்ய வேண்டும். ஆனால் சற்று நேர இடைவெளி விட்டு செய்யலாம்.

இறுக்கமாக மார்பகங்களுக்கு இயற்கை குறிப்புகள் (Natural remedies for firming breasts)

முட்டை மற்றும் வெங்காயம் (Egg and onion)

முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து க்ரீம் போலாக்கி மார்பகங்களின் அடிப்பகுதியில் தடவ வேண்டும். அப்படியே அரை மணி நேரத்திற்கு விட்டுவிட்டு வெங்காயத்தை வெட்டி அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து இந்த நீரால் மார்பகங்களைக் கழுவ வேண்டும். இது மார்பு தளர்வைப் போக்கி இறுக்கத்தைக் கொடுக்கும்.

வெந்தயம் (Fenugreek seeds)

மார்பகத்தை இறுக்கமாக்கும் பண்பு வெந்தயத்தில் உள்ளது. வெந்தயப் பொடி மூலம் பேஸ்ட் செய்து அதைக் கொண்டு மார்பை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 5 – 10 நிமிடங்களுக்குப் பிறகு நீரினால் கழுவிக் கொள்ளலாம். இதனை வழக்கமாக செய்து வந்தால் தளர்வான மார்பை இறுக்கமான மார்பாக மாற்றலாம்.

ஷு தாவர எண்ணைய் (Shea butter)

இந்த ஷு எண்ணையில் வைட்டமீன் ஈ அதிகம் உள்ளது அது தோலை இறுக்கமாக்கி மார்பை எடுப்பாக மாற்றும். இந்த எண்ணைய் செல்களை சரிசெய்கிறது. இந்த எண்ணையை கொஞ்சம் எடுத்து மார்பில் தடவி 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். பின்னர் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு 3 தடவை இப்படி செய்து வர வேண்டும்.

ரஸ்ஸல் களி (Rhassoul clay to tighten the bust skin)

சருமத்தை இறுக்கமாக்க இது ஒரு சிறந்த இயற்கைப் பொருள். இந்த களியில் சிலிக்கா, இரும்பு, கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இந்தக் களியை நீரில் கரைத்து பேஸ்ட் ஆக்கி மார்பகங்களில் தடவி அது உலரும் வரை அப்படியே விட்டு பின் கழுவிக் கொள்ள வேண்டும்.

வெள்ளரி, வெண்ணைய் மற்றும் முட்டை மஞ்சள் (Cucumber, butter and egg yolk make to treat saggy busts)

மார்பகங்களை தூக்கி நிறுத்த இது ஒரு சிறந்த கலவை. மார்பக திசுக்களை வலிமையாக்கும் திறன் கொண்டது. வெள்ளரி, முட்டை மஞ்சள் கரு மற்றும் வெண்ணைய் இவற்றைச் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை மார்பகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம்.

மாதுளையின் பயன் (Pomegranate for firming loose breasts)

மாதுளையின் தோல் மற்றும் கடுகு எண்ணைய் கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். இதை மார்பில் தடவி மசாஜ் செய்யவும். இதை தினமும் இரவு உறங்கச் செல்லும்முன் தினசரி செய்து வர வேண்டும். கடுகு எண்ணைக்குப் பதில் வேப்பெண்ணையும் பயன்படுத்தலாம்.

கற்றாழையின் பயன் (Aloe vera for breast tightening)

கற்றாழையில் இயற்கையிலேயே சருமத்தை இறுக்கும் பண்புகள் உள்ளன. கற்றாழையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் பாதிப்படைந்த செல்களை சரி செய்கிறது. கற்றாழை ஜெல்லை மார்பில் தடவி 10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யுங்கள் பின்னர் வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பனிக்கட்டி மசாஜ் (Ice massage for breast tightening)

குளிர்ந்த பனிக்கட்டி மார்பு திசுக்களை இறுக்கி தளர்வைக் குறைத்து உங்களுக்கு எடுப்பான மார்பை கொடுக்கிறது. இரண்டு பனிக்கட்டிகள் எடுத்து மார்பில் 1 நிமிடம் மசாஜ் செய்யவும்.

மார்பகத்திற்கான உடற்பயிற்சி (Exercise of breast)

செஸ்ட் ப்ரஸ் பயிற்சி, புஸ்அப், டம்பெல் ஃப்ளையர்ஸ் மார்பக தளர்வைப் போக்கி இறுக்கமாக்க சிறந்த பயிற்சிகள். கைகளை முன் பின்னாக பல தடவைகள் சுற்றும்போதும் மார்பைச் சுற்றியுள்ள தசைகள் இறுகும். எடை தூக்கும் பயிற்சிகள் தொடர்ந்து வந்தாலும் மார்பு தளர்வு குறையும்.

நீச்சல் (Swimming for breast fitness)

உங்கள் மார்பு இறுக்கமாக எத்தனையோ பயிற்சிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் நீச்சல் முயற்சித்துள்ளீர்களா?. நீச்சல் அடிக்கும் போது இரு கைகளும் தொடர்ந்து சுழல்வதால் மார்பகங்களை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாகி மார்பு தளர்வது குறைகிறது. தினமும் அரை அல்லது 1 மணி நேரம் நீச்சல் அடிப்பதால் மார்பு தளர்வு சரியாகும்.