Kesar for pregnant women in Tamil – கர்ப்பிணி பெண்களுக்கு கேசர்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப் பூ சாப்பிடுகிறார்கள்கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் பிரச்சனைகளை குங்குமப் பூ தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆமாம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிடுவது பாதுகாப்பானதுதான்.

ஒரு மூலிகையாக குங்குமப் பூவில் பல வகை குணங்கள் உள்ளன. நெடுங்காலமாக பல்வேறு காயங்களுக்கு மருந்தாக இந்த குங்குமப் பூ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பமாகும் இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டு வரும்போது அவர்களின் தசைகள் தளர்வாகின்றன.

கர்ப்பவதிகள் குங்குமப் பூ சாப்பிடலாமா? (Can pregnant women consume saffron?

பொதுவாக குங்குமப் பூவின் விலை சந்தையில் மிக அதிகமாக உள்ளது ஏனெனில் இதைத் தயாரிக்க மிக அதிக செலவாகும். குழந்தைகள் அழகாக வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று பல பெண்கள் குங்குமப் பூவை அதிகமாக சாப்பிடுகின்றனர்கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பொதுவாக எல்லாவற்றையும் மிதமாக சரியான அளவுதான் சாப்பிட வேண்டும் அதேபோல் குங்குமப்ப பூவையும் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, தினமும் இரவு 1 டம்ளர் பாலில் ஒரு சில குங்குமப் பூ குச்சி இதழ்களைப்போடடு குடிக்கலாம்.

குங்குமப் பூவினால் பக்கவிளைவுகள் உண்டா? (Does saffron have any side effects?)

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பக்கவிளைவுகள் வரும், அது குங்குமப் பூவிற்கும் பொருந்தும். 12கிராம் விட அதிகமாக குங்குமப் பூ சாப்பிடுவது விசமாக மாறிவிடும்கருப்பையை சுருக்கிவிடும்அதிகமாக குங்குமப் பூ உட்கொண்டால் தலைசுற்றல், மயக்கம், வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும். குங்குமப் பூ சாப்பிட நினைப்பவர்கள் முதலில் ஒரு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்து பிறகு பயன்படுத்தலாம்.

கர்ப்பவதிகள் எவ்வளவு குங்குமப் பூ சாப்பிடலாம்? (How much saffron should a pregnant woman consume?)

கர்ப்பகாலத்தில் எந்த ஒரு பொருளையும் அளவோடு எடுக்க வேண்டும். இது நீங்கள் ஒருவர் அல்ல உங்கள் குழந்தைக்கும் ஊட்டம் செல்ல வேண்டும். 1 டம்ளர் பாலில் ஒரு சில குச்சி இதழ்கள் குங்குமப் பூ போட்டு குடிக்கலாம் அல்லது சோறு சாப்பிடும்போது சில குச்சி இதழ்கள் போட்டும் சாப்பிடலாம். ஸ்பெயின் நாட்டில் பெண்கள் பாயில்லா என்ற உணவில் குங்குமப் பூ போட்டு தயாரிப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் குங்குமப் பூவை தரமான நிறுவனமல்லாதவர்களிடமிருந்து வாங்காதீர்கள். அரசு அனுமதி பெற்ற தரமான நிறுவனத்தின் குங்குமப் பூவை வாங்குங்கள். காலாவதியாகும் தேதியை கவனித்துக் கொள்ளுங்கள்.

குங்குமப் பூ சாப்பிடுவதின் நோக்கம் (Purpose of consuming saffron)

பல வகை காரணங்களுக்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. சீரண மண்டலதத்தி்ன செயல்பாடுகளை மேம்படுத்தி நன்கு பசியைத் தூண்டும் இந்த குங்குமப் பூ. மேலும் கர்ப்பவதிகள் மனஓட்டம் பலவாறாக மாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய மனநிலையை நிலைப்படுத்தவும் குங்குமப் பூ உதவுகிறது.

எப்போது குங்குமப் பூ சாப்பிட வேண்டும் (When should you consume kesar?)

கர்ப்பமான பெண்கள் இரண்டாம் மூன்று மாதத்திலிருந்து சாப்பிடலாம். அதாவது 4ம் மாத ஆரம்பத்திலிருந்து. காலையிலோ அல்லது மாலையிலோ சூடான பாலில் ஒரு சில குங்குமப் பூ குச்சி இதழ்களைப் போட்டு குடிக்கலாம். கர்ப்பவதிகளுக்கான உணவு சமைக்கும்போது கூட சில குங்குமப் பூ இதழ்களை போட்டு சமைக்கலாம்.

குங்குமப் பூ வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் .சில கடைகளில் பாக்கெட்டுகளில் இல்லாதவற்றை விற்பனை செய்வார்கள். அவை கர்ப்பவதிகளுக்கு உடல் உபாதையைத் தந்துவிடும். ஆகவே, தரமான நிறுவனமா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டுவந்தால் வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள்.

குங்குமப் பூவை குறைவான அளவே உணவிலோ பாலிலோ சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக அதிகமாக சேர்க்கக் கூடாது. இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

சில நேரங்களில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பசும்பால் குடிக்கும்போது அது ஜீரணமாகுவது சிரமமாக இருக்கும். அத்தகைய நிலைகளில் ஒரு சில குங்குமப் பூ இதழ்களை பாலில் போட்டு குடிக்கும்போது ஜீரணம் நன்கு இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப் பூ சாப்பிடுவதன் நன்மைகள் (The benefits of consuming Saffron during pregnancy)

மனஅழுத்தம், பதற்றம் குறைதல் (Relieves stress, anxiety and depression)

கர்ப்பம் மற்றும் கர்ப்பகாலம் என்பது வெறும் உடல் சார்ந்த செயல்பாடு அல்ல, மனது மற்றும் சிந்தனை சார்ந்த செயல்பாடும் அடங்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பல வித மனநிலைக்கு ஆளாகுவார்கள் மற்றும் அதனால் ஒருவித மனக்குழப்பம், அழுத்தம் போன்றவை ஏற்பட்டு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது, குங்குமப் பூ சாப்பிட்டுவந்தால் இத்தகைய மன அழுத்தங்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சருமத்தின் ஆரோக்கியம் (Restores the appearance of the skin)

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில தோல் நோய்கள் ஏற்படும். சருமத்தின் பொலிவு குறைந்து காணப்படும் அதனால் பெண்கள் பொலிவிழந்து இருப்பர். இத்தகைய நேரங்களில் உங்களுக்கு முக பேக்குகள் உபயோகிக்கும் போது அதில் குங்குமப் பூவை கலந்து பயன்படுத்தலாம். சருமம் பொலிவு பெறும்.

அசிடிட்டியை தடுக்கும் (Prevents acidity)

கர்ப்ப காலத்தில் ஜீரணம் மெதுவாக நடைபெறும். ஹார்மோன்களின் மாறுபாட்டால் இரைப்ப எளிதில் அசிடிட்டி பிரச்சனைக்கு ஆட்படும். தொடர்ந்து குங்குமப் பூ சாப்பிட்டு வருவதால் இத்தைகய கர்ப்பகால அசிடிட்டி பிரச்சனையை சரியாக்கலாம்.

பசியை தூண்டுதல் (Enhances appetite)

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்து அவசியம். ஆனால் கர்ப்ப காலத்தின் போது சாதாரண நேரங்களை விட பசி குறைவாகவே எடுக்கும் அதனால் பெண்களும் குறைவாகவே உணவு உட்கொள்வார்கள் அதனால் சரியான ஊட்டம் உடலுக்கு கிடைக்காமல் போகும். குங்குமப் பூ சாப்பிடுவதால் பசி தூண்டப்பட்டு சரியான அளவு சாப்பிட முடியும்.

மனநிலை மாற்றம் சீராகுதல் (Stops mood swings)

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மனநிலை பலவகையாக மாறிக் கொண்டே இருக்கும். இத்தகைய மன மாற்றங்களை குங்குமப் பூ சீராக்கும் என்று கூறப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மனமாற்றங்களால் கருவில் உள்ள குழந்தையிடமும் அந்த மாற்றங்கள் பிரதிபலிக்கும். இதை குங்குமப் பூ சீராக்கும்.

இரத்த அழுத்தம் சீராகுதல் (Manage blood pressure)

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் இதயத்துடிப்பு சாதாரண நிலையை விட 25% வரை அதிகமாக இருக்கும் .இதனால் இரத்த அழுத்தமு் அதிகமாகும். கர்ப்பவதிகளின் இரத்த அழுத்தம் சீராக இருக்கவேண்டியது மிக முக்கியமான ஒன்று. குங்குமப் பூவில் உள்ள க்ரோசிடான் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

அடிவயிறு வலியைக் குறைக்கும் (Soothes cramps)

பொதுவாக ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் அடிவயிறு வலியால் அவதிப்படுவார்கள். கர்ப்ப காலத்திலும் இத்தகைய அடிவயிறு வலி வரலாம். குங்குமப் பூ இத்தகைய வலியைக் குறைக்கும்.

காலை சோம்பலை நீக்கும் (Clams morning sickness)

கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய நிலை இருக்கும். காலை தேநீரில் சில குங்குமப் பூவை இட்டு குடித்து வந்தால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புத்துணர்வு ஆவார்கள் மற்றும் காலை நேர மயக்கமான நிலையும் மாறும். காலையில் இப்படி தேநீரில் குடிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்.

இரவுத் தூக்கம் (Get a good night sleep)

இரவில் நல்ல தூக்கத்தை விட சிறந்தது எதுவுமில்லை. ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சரியான இரவுத் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவர். இரவில் ஒரு டம்ளர் பாலில் சில குங்குமப் பூவை போட்டு குடித்து வந்தால் இரவுத் தூக்கம் மேம்படும்.

இரும்புச் சத்து (Increase iron level)

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தேவையான அளவு இரும்புச் சத்தைப் பெறவேண்டும். இது கருவில் உள்ள குழந்தைக்கும் மிக அவசியமான ஒன்று. குங்குமப் பூவில் அதிக இரும்புச் சத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

முடி உதிர்தலைத் தடுக்கும் (Prevents hair fall)

ஹார்மோன்கள் மாற்றத்தால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக தலைமுடி உதிரும். இத்தகைய கர்ப்பகால தலைமுடி உதிர்வை குங்குமப் பூ தடுக்கும். குங்குமப் பூ, பால் மற்றும் லிகோரைஸ் கலந்த கலவையை தலையில் தேய்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.