KARUM PULLIGAL NEEKUTHAL – முக கருமுள்ளை தேன் கொண்டு நீக்குதல்

முகத்தை பளபளப்பாகவும், வடுக்கள் இல்லாத அழகா முகமாகவும் வைத்துக்கொள்ள நாம் அனைவரும் பல்வேறு விசயங்களைச் செய்கிறோம், ஆனாலும் நாம் கவனிக்க மறக்கின்ற ஒன்று இந்த கருமுள் பிரச்சனை. கருமுள் என்பது நம் முகத்தில் மூக்கின் மேற்பரப்பில், கன்னத்தில், கழுத்தில் மற்றும் தோள் பகுதயில் இருக்கும் சிறிய கருமையான புள்ளிகள்.

சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை தெரியாது ஆனால் ஒருவர் நெருக்கமாக பார்க்கும்போது இத்தகைய கருமுள்ளைப் பார்க்கலாம். சில வீட்டு மருத்துவக் குறிப்புகள் மூலம் மற்றும் தேன் உதவியுடன் எப்படி இந்த கருமுள்ளை அகற்றுவது என்று பார்க்கலாம்.

கருமுட்களை தேன் கொண்டு எப்படி நீக்குவது? (How does honey help in removing blackheads?)

  • தேன் அதிக சுவையானது என்பது போக, நம் சருமத்திற்கு அழகைக் கூட்டும் பல்வேறு பொருட்களை உள்ளடக்கிறது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இந்த தேன் நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • தேன் ஒரு கிருமி எதிர்ப்பு பொருள் இது சருமத்தில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி கருமுள்களை அகற்றுகிறது. முகத்தின் சருமத்தை ஈரப்பதமாக வைக்க தேன் உதவுகிறது.
  • தேன் கலந்து தயாரிக்கப்படும் வீட்டு மருத்துவக் குறிப்புகள் கருமுள்களை நீக்கி சரமத்தை மென்மையாக்குகிறது.
  • தேனில் ஆண்டிஆக்ஸிடென்ட், ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.
  • தேனில் குறைந்த அளவு pH 3.2 லிருந்து 4.5 வரை மட்டுமே உள்ளது. தொடர்ந்து தேன் பயன்படுத்தும்போது, முழுமையாக கருமுள் நீங்குகிறது.

தேன் பயன்படுத்தி சரும கருமுள்களை நீக்குவது எப்படி? (How to removew blackheads with honey)

தனித்தேன் (Raw honey)

  • நல்ல சுத்தமான தரமான தேன் வாங்கி சருமத்தில் கருமுள் இருக்கும் இடத்தில் தடவுங்கள்.
  • 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள்
  • தேன் சருமத்தோடு இறுகியிருக்கும். ஆகவே, வெதுவெதுப்பான நீரினால் கழுவவேண்டும்.
  • வாரத்திற்கு மூன்று தடவை இப்படி செய்துவாருங்கள்

தேன் மற்றும் ஆப்பிள் (Honey and apples to clear blackheads quickly)

  • புதிதான ஒரு ஆப்பிளை தோல் உரிக்கவும்
  • சிறிதாக நறுக்கி நனகு அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிதளவு புதினா சேர்க்கவும்
  • இதனுடன் 1 தேக்கரண்டி சமைக்காத ஓட்ஸ் அல்லது சோளமாவு சேர்க்கவும்
  • 1 தேக்கரண்டி தேனை மிதமாக சூடு செய்து இந்தக் கலவையுடன் சேர்க்கவும்
  • இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பசைபோல் கட்டியாக மாறும்
  • இதை சருமத்தில் கருமுள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை விட்டு வைக்கவும்
  • முழுமையாக உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரினால் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்

தேன், ஓட்ஸ் மற்றும் தக்காளி (Honey, oatmean and tomatoes to clear blackheads fast)

  • 1 கப் ஓட்ஸ் எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்
  • 3 தக்காளிகளை நன்கு பிசைந்து கட்டியான கூழ் போல் ஆக்கவும்
  • இரண்டையும் கலந்து முகத்தில் கருமுள் இருக்கும் இடங்களில் தடவி 10 நிமிடங்கள் வரை உலர விடவும்
  • பின் நீரால் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கருமுள் போகும் வரை அடிக்கடி இப்படி செய்யலாம்

தேன் மற்றும் முட்டை வெள்ளைக்கரு (Honey and egg white to get rid of blackheads fast)

  • 1 முட்டையிலிருந்து வெள்ளைக்கரு மட்டும் தனியாக எடுக்கவும்
  • இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.
  • இரண்டையும் கலந்து முகத்தில் தடவி உலரும் வரை விட்டு விடவும்
  • முதலில் வெதுவெதுப்பான நீரினால் நன்கு கழுவி பின் குளிர்ந்த நீரில் மீண்டும் கழுவிக் கொள்ளலாம்.

தேன் மற்றும் ஓட்ஸ் (Honey and oats to remove blackhead quickly)

  • 1 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்
  • ½ தேக்கரண்டி தேன் சேர்க்கவும்
  • 1 முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்
  • நன்றாக இவைகளை பிசைந்து பசை போல் ஆக்கவும்
  • இந்தக் கலவையை முகத்தில் கருமுள் இருக்கும் இடத்தில் தடவவும்
  • 10 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ள வேண்டும்
  • கருமுள் மறையும் வரை இதை தொடர்ந்து செய்யலாம்.

தேன் மற்றும் பாதாம் (Honey and almonds in blackhead removal)

  • சில பாதாம் கொட்டைகளை எடுத்து நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் தேன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  • முகத்தில் இதைத் தடவிக் கொள்ள வேண்டும்
  • சில நிமிடங்களுக்குப் பிறகு நீரினால் நன்கு கழுவிக் கொள்ளலாம்
  • வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் கருமுள் மறையும்

தேன், சர்க்கரை மற்றும் பால் (Honey, sugar and milk to stop blackheads)

  • 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை.
  • இதனடன் சிறிதளவு பால் சேர்த்து நன்னு குழைக்கவும்
  • இந்தக் கலவையை கன்னத்தில் மற்றும் கருமுள் இருக்கும் இடத்தில் தடவவும்
  • அரை மணி நேரம் வரை காத்திருக்கவும்
  • வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளுங்கள்
  • கருமுள் நீங்கும் வரை இதை தொடர்ந்து செய்து வாருங்கள்

தேன் மற்றும் கடல் உப்பு (Honey and sea salt to stay away from blackheads)

  • 1 தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு சிறு பிடி (இரண்டு விரல்களில் பிடித்து எடுக்கும் அளவு) கடல் உப்பு சேர்க்கவும்
  • இதை கருமுள் இருக்கும் இடத்தில் தடவவும்
  • மெதுவாக மசாஜ் போன்று செய்யவும்
  • நீரினால் பின்னர் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்
  • தொடர்ந்து இதைச் செய்து வரலாம். தேன் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் மற்றும் கடல் உப்பு சரும அழுக்குகளை நீக்கம்

தேன் மற்றும் எலுமிச்சை (Honey and lemon to get rid of blackheads)

  • ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைக்கவும்
  • இரண்டு எலுமிச்சை துண்டுகளிலும் சில துளிகள் தேன் விடவும்
  • இந்த எலுமிச்சை துண்டை கன்னத்தில் மற்றும் கருமுள் இருக்கம் இடத்தில் வைத்து தேய்க்கவும்
  • 5 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின் கழுவிக் கொள்ளலாம்
  • வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம்
  • இதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவும் சேர்க்கலாம்

தேன், உப்பு மற்றும் எலுமிச்சை (Honey, salt and lemon to remove blackheads fast)

  • சரியளவு தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு எடுத்துக் கொள்ளவும்
  • இதனடன் சிறிதளவு உப்பு சேர்த்து கரைக்கவும்
  • இந்தக் கலவை கருமுள் இருக்கும் இடத்தில் தடவவும்
  • 10 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின் நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும்
  • துணியால் நன்கு துடைத்துக் கொள்ளவும். அடிக்கடி இதைச் செய்யலாம்

தேன், எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி (Honey, lemon and strawberry for blackheads)

  • 1 தேக்கரண்டி தேன் மற்றும் ½ தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு
  • 2-3 ஸ்ட்ராபெர்ரி நன்கு மசித்தது
  • இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்
  • கருமுள் இருக்கும் இடத்தில் இதைத் தடவவும்
  • 3 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்கவும் மசாஜ் செய்வது போல்
  • பின்னர் நீரினால் கழுவிக் கொள்ளலாம்
  • தொடர்ந்து இப்படி செய்து வாருங்கள் கருமுள் நீங்கும் வரை.

தேன், எலுமிச்சை மற்றும் ஓட்ஸ் (Honey, lemon and oats)

  • ½ கப் ஒட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்
  • ¼ கப் நீர் இதனுடன் சேருங்கள்
  • ¼ எலுமிச்சைச் சாறு
  • இவை அனைத்தையும் நன்கு கலந்து கருமுள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும
  • சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளலாம்
  • துணியால் சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி இப்படி செய்து வாருங்கள்.