PINPURATHIL ULLA PARUKKALAI POKUTHAL – பிட்டத்தில் உள்ள பருக்களை இயற்கையான முறையில் போக்குவது எப்படி?

உங்கள் பிட்டத்தில் உள்ள பருக்கள் பற்றி பொதுவெளியில் பேச விரும்புவீர்களா? விரும்பமாட்டீர்கள்! அப்படி தவிர்ப்பதால் உங்கள் பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் சிறு கொப்பளங்களால் ஏற்படும் வலி குறையப்போவதில்லை. சில நேரங்களில், பிட்டத்தில் வரும் பரு மற்றும் மருக்கும் மிக அதிக வலியை ஏற்படுத்தும்.

பொதுவாக இதை யாரும் அவ்வளவாகப் பேசுவதில்லை, ஆனால் ஒரு பகுப்பாய்வு நடத்தினால் கிட்டதட்ட பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பது தெரியவரும். பிட்டத்தில் உள்ள பருக்களுக்கான தீர்வான உணவு முறை, சுத்தம் மற்ற களிம்புகள் பற்றி படித்திருப்பீர்கள். இவறை்றை எல்லாம் தாண்டி, மற்ற பல வீட்டு மருத்துவக் குறிப்புகளும் இத்தகைய பருக்களைப் போக்க உள்ளன.

முகத்தில் பருக்கள் வருபவர்களுக்கு பிட்டத்திலும் பருக்கள் வரும். உங்களுக்குத் தெரியுமா உடலின் சூடான உறுப்புகளில் ஒன்று இந்த பிட்டம். சில வீட்டு வைத்திய குறிப்புகள் பின்பற்றுவதன் மூலம் பிட்டத்தில் வரும் பருக்களையும் அதனால் ஏற்படும் எரிச்சலையும் குறைக்க முடியும், ஆனால் அதிகமான பருக்கள் நெடுநாட்களாக இருப்பின் உடனடியான ஒரு சரும மருத்தவரைப் பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

பிட்டத்தில் வரும் பருக்களின் வகைகள் (Types of buttock acne)

ஃபால்லிகுலிட்ஸ் (Follliculitis)

இந்த பருக்கள், பிட்டத்தில் உள்ள மயிர்கால்களினுள் வரும் வீக்கத்தால் வருபவை. பிட்டத்தில் உள்ள முடித்துளைகளில் பாக்டீரிய மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படுவதே இதற்குக் காரணம். இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.

கார்பன்சில்ஸ் (Carbuncles)

இது பிட்டத்தில் உள்ள தோலுக்கு அடியில் ஏற்படும் கொப்பளங்களாகும். இவை மிகுந்த வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் மோசமானவையாகும். இவை அதிகமானால் உடனே சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

பிட்டத்தில் வரும் பருக்களுக்கான மருத்துவ குறிப்புகள் (Butt pimple / Buttock acne remedies)

வெந்நீர் சிகிச்சை (Hot water compress treatment)

பிட்டத்தில் உள்ள பருக்களிலிருந்து விடுபட நீங்கள் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கரைத்து அதில் ஒரு துண்டை நனைத்து பிட்டத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது மயிர்கால்களிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் வலியையும் குறைக்கும். தினமும் 15 நிமிடங்கள் இதைச் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சைச் சாறு மற்றும் தயிர் (Lemon juice with the yogurt)

எலுமிச்சையில் பாக்டீரிய எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையையும் நீக்கும். சருமத்தின் எண்ணைப்பசை குறைந்தால் பருக்கள் வருவதும் குறையும். 1 தேக்கரண்டி தயிர் மற்றும் ½ தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பிட்டத்தில் பருக்கள் உள்ள பகுதியை வெந்நீரால் நன்கு துடைத்துவிட்டு ஒரு பஞ்சை அந்த எலுமிச்சைக் கலவையில் நனைத்து பருக்கள் மீது தடவ வேண்டும். உலரும் வரை 5 – 10 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம். தினசரி இதைச் செய்து வந்தால் பருக்கள் குறையும்.

மிக இறுக்கமான உடை (Ditch tight fitted clothes)

பிட்டத்தில் பருக்கள், கொப்பளங்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் காற்று புகாத அளவு இறுக்கமான ஆடை. ஆகவே மென்மையான ஆடை குறிப்பாக கோடை காலங்களில் கண்டிப்பாக தளர்வான ஆடை அணிந்தால்தான் இத்தகைய கொப்பளங்கள் வராமல் காக்க முடியும். அதேபோல் பருத்தி துணியிலான உள்ளாடைகள் அணிய வேண்டும். ஸ்டைல் என்பதை விட நமக்கு சௌகரியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

தேங்காய் எண்ணைய் (Nourish using coconut oil)

பிட்டத்தில் வரும் பருக்களைப் போக்க தேங்காய் எண்ணைய் சிறந்த ஒன்றாகும். தினமும் இரண்டு தடவை தேங்காய் எண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் (Use apple cider vinegar on the butt acne)

பிட்டத்தில் வரும் பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து செயலாற்றும் ஒன்று வைட்டமீன் சி அதிகம் உள்ள ஆப்பிள் சீடர் வினிகர். ஒரு பஞ்சை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் விட்டு கழுவிக் கொள்ளலாம். பிட்டத்தில் உள்ள பருக்களை கிள்ளவோ சொறியவோ கூடாது. இது மேலும் பருக்கள் உருவாக காரணமாக அமையும்.

மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாறு (Turmeric powder and lemon juice)

எலுமிச்சைசாறில் மஞ்சள் பொடியைக் கலந்து நன்கு பேஸ்ட் செய்து பருக்கள் உள்ள இடத்தில் தடவலாம். மஞ்சளின் கிருமி எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களை அழிக்கும். வாரத்திற்கு 3 தடவை இந்த பேஸ்ட் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன் சிகிச்சை (Honey treatment for butt pimples)

பல சருமப் பிரச்சனைகளை நீக்குவதற்கு தேன் ஒரு சிறந்த மருந்து. பருக்களை நீக்குவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

சமையல் சோடா (Baking soda)

பிட்டத்தில் உள்ள பருக்களைப் போக்க சமையல் சோடா உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமையல் சோடாவுடன் நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்து, நீங்கள் குப்புறப்படுத்த நிலையில் பருக்கள் இருக்கும் இடத்தில் இதைத் தடவுங்கள். 15 நிமிடங்கள் வரை விட்டு விட்டு பின்னர் கழுவிக் கொள்ளுங்கள். சில நாட்கள் தொடர்ந்து செய்தால் பருக்கள் மறையும்.

சுகாதாரம் பேணுதல் (Maintain hygiene)

சுகாதாரத்தைப் பேணிணாலே பல நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். பருக்கள் வரக் காரணமான பாக்டீரியாக்கள் எந்த ஒன்றிலும் இருக்கலாம். ஆகவே, எப்போதும் உங்களையும் உங்கள் உடைமைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது சிறந்தது.

உள்ளாடையில் கவனம் (Undergarments care)

நீங்கள் எந்தமாதிரியான உள்ளாடை அணிகிறீர்கள் என்பது மிக முக்கியம். எப்போதும் சுத்தமான, சௌகரியமான உள்ளாடைகளையே அணிய வேண்டும். உங்கள் ஆடை வழியே காற்று உட்சென்று சருமம் சுவாசிக்கும் அளவு இருக்க வேண்டும்.

பிட்டத்தில் வரும் பருக்களுக்கான மருந்து (Acne combating ingredients)

பென்சாயில் பெராக்சைடு (Benzoyl-peroxide)உள்ள மருந்துகள் பிட்டத்தில் வரும் பருக்களைப் போக்கும். மேலும். Salicycclic gel மிக பிரபலமான ஒரு மருந்தாகும், இதையும் முயற்சிக்கலாம். இந்த மருந்து வீக்கம், வலியைக் குறைத்து பருக்களையும் போக்கும்.

மேலும் பின்பற்ற சில (Also follow)

  • காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை ஒரே ஆடையை அணியாதீர்கள், மாற்றிக் கொள்ளுஙகள்.
  • பருத்தி ஆடை, உள்ளாடை அணிவது மிகச்சிறந்தது.
  • பிட்டத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை கழுவுங்கள்.
  • வேதிப்பொருட்கள், ஸ்ப்ரே போன்றவைகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். அவை எரிச்சலை உருவாக்கும்.

சூரிய ஒளி சிகிச்சை (Sun treatment)

உடலின் மென்மையான தசைகளில் தான் பருக்கள் அதிகம் வரும். பிட்டச் சதைகளும் மென்மையானவை. பிட்டத்தில் பருக்கள் வந்தால் உட்காருவது மிக சிரமம், வலி ஏற்படும். நீங்கள் வீட்டில் ஆடைகளைக் களைந்து சூரிய ஒளியில் படுக்க முடியுமானால் தினமும் சிறிது நேரம் அப்படி வெயிலில் படுக்கலாம்.

உடலில் நச்சு நீக்குதல் (Detoxification)

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். உணவில் அதிகமாக கீரைகள் சேர்ப்பது, தினமும் ஒரு பழச்சறு அருந்துதல், அதிகமான நீர் குடித்தல் போன்றவைகளால் உடல் நச்சுகள் நீங்கும்.

வைட்டமீன்களை மறக்க வேண்டாம் (Do not forget the vitamins)

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் தொடர்ந்து கிருமிகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டேயிருக்கும். ஆகவே, வைட்டமீன் ஏ.பி5. சி மற்றும் ஈ ஆகியவை உடலில் தேவையான அளவு இருந்து கொண்டேயிருக்கும் படி உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டின் பயன் (Garlic for buttock acne)

பிட்டத்தில் வரும் பருக்களைக் குறைக்க பூண்டைப் பயன்படுத்தலாம். பூண்டை உரித்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை (Aloe vera)

கற்றாழை ஜெல் எடுத்து அதை பருக்கள் இருக்கும் பகுதிகளில் தேய்த்து உலரும் வரை விட்டு விட வேண்டும். கற்றாழை ஜெல்லின் மருத்துவ குணங்களை சருமம் உள்வாங்கி கிருமிகளை அழிக்கும். உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.

ஆண்டிசெப்டிக் க்ரீம் (Antiseptics to clean butt acne)

சருமத்தை கிருமி தொற்றிலிருந்து பாதுகாத்து தூய்மையாக வைப்பது இத்தகைய பருக்கள் வராமல் இருக்க மிக முக்கியமானது. அதனால் பருக்கள் கொப்பளங்கள் பிட்டத்தில் இருந்தால் இரவில் உறங்கச் செல்லும் முன் நல்ல ஒரு ஆண்டிசெப்டிக் க்ரீம் தடவிக் கொண்டு பின் காலையில் எழுந்ததும் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

வேப்ப எண்ணைய் (Neem oil)

வீட்டில் வேப்ப எண்ணைய் இருந்தால் அதை பிட்டத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை தடவுங்கள் நன்கு குணமாகும்.