Tamil tips for heat rash – வெப்ப அரிப்புக்கான உதவிக்குறிப்புகள்

இந்த கடுமையாக கோடைகாலத்தில் வியர்க்குருவால் பாதிக்கப்படுகிறீர்களா? கவலை வெண்டாம்; ஒரே இரவில் வியர்க்குருவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்கோடை காலங்களில் அதிகமாக வியர்த்து, அந்த வியர்வை காய்ந்து வியர்வை சுரப்பிகள் அடைபடும்போது சருமத்தில் வியர்க்குரு வருகின்றது. ஆகையால், வியர்க்குரு வராமல் இருக்க வேண்டுமெனில் உடலில் அதிக வியர்வை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக வியர்க்குருவால் பெரிதாக பாதிப்பில்லை, ஆனால் சற்று எரிச்சல் ஊட்டும் வகையில் இருக்கும்போது நம்மில் பெரும்பாலானவர்கள் கைகளால் அல்லது ஏதேனும் பொருளைக் கொண்டு வியர்க்குரு இருக்கும் இடத்தில சொறிவதால் சருமம் பாதிக்கப்பட்டு மேலும் சருமம் எரிய ஆரம்பிக்கிறது. இது ஒரு தொந்தரவாக மாறுகின்றது. இப்படி சொறிந்து சருமத்தை மேலும் பாதிப்படைய வைப்பதால் வியர்க்குரு சரியாக இன்னும் அதிக நாட்கள் எடுக்கிறதுஆகையால் வியர்க்குரு வந்துவிட்டால் அந்த இடத்தில் சொறியாமல் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமானது. மிக மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

வியரக்குருவை எளிதில்போக்கும் சில மருத்துவக் குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். இத்தகைய தடிப்புகளை உங்கள் சருமத்தில் நீங்கள் கண்டால், இந்த மருத்துவக் குறிப்புகளைச் செய்தால் அவைகள் ஒரே இரவில் மாறிவிடும். ஆனால் அத்தகைய தடிப்புகள் சில நாட்களாக ஏற்கனவே இருந்தால் அவைகள் ஒரே இரவில் மாற வாய்ப்பில்லை ஆனால் இந்த மருத்தவ குறிப்புகளை பின்பற்றினால் அவைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மருத்துவக் குறிப்புகளை அறிந்து கொள்ள தொடர்ந்து கீழே தொடர்ந்து படியுங்கள்.

வியர்க்குருவை ஒரே இரவில் போக்குவதற்கான குறிப்புகள் (Tips for getting rid of prickly heat rashes overnight)

  • உடலில் வியர்க்குரு இருப்பதாக கண்டறிந்த உடனே நீங்கள் செய்ய வேண்டியது மேலும் உங்கள் உடலில் வியர்வை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. அதிக வியர்வை வரவழைக்கும் உடல் உழைப்பு, பயிற்சிகளைக் குறைத்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் இருக்க வேண்டும், நல்ல பருத்தி ஆடைகளை இறுக்கமில்லாத வகையில் அணிய வேண்டும். உப்பு நீரில் குளிக்கலாம் அது உடலில் வியர்வை சுரப்பதை சற்று தணிக்கும்.
  • குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது உடலில் வியர்க்குருவை மேலும் அதிகமாக்காமல் தடுக்கும். சூழல் வெப்பநிலை குறைவாக இருக்கும்போது சருத்தின் வியர்க்குரு குறைய ஆரம்பிக்கும். ஆகவே, உங்களுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருந்தால் அத்தகைய அறையில் இருப்பது வியர்க்குருவைக் குறைக்கும்.
  • மிக முக்கியமான ஒருவிசயம் உங்கள் படுக்கை எந்த அளவு தரமான ஒன்றாக இருக்கிறது என்பது. உங்கள் படுக்கை சூழல் வெப்பத்தை உறிஞ்சி படுக்கை சூடாக இருந்தால் நிச்சயம் வியர்க்குரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகவே. மெத்தையில் நல்ல பருத்தி துணியை விரித்து அதில் படுக்கவேண்டும். உங்கள் படுக்கை சூடாக இருந்தால் உடலில் வியர்க்குரு கண்டிப்பாகக் குறையாது.

வியர்க்குருவை ஒரே இரவில் போக்குதல் (Getting rid of prickly heat rashes overnight)

பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி வியர்க்குரு அரிப்பிலிருந்து ஒரே இரவில் விடுதலை பெறுங்கள்.

படி 1

வியர்க்குரு இருப்பதை கண்டறிந்த உடனேயே, ஆடையை அகற்றி நல்ல குளிர்ந்த நீரினால் அந்த இடத்ததை கழுவ வேண்டும். கழுவியபின் முறையாக துடைத்து சருமத்தை உலர விடவேண்டும்.

படி 2

ஓட்ஸ் 2 தேக்கரண்டி எடுத்து குளிர்ந்ந நீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். பின்னர் இதை எடுத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை விட்டுவிடலாம். பின்னர் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இந்த ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணைய், செபம் போன்றவைகளை நீக்கி வியர்வை சுரப்பிகளைத் திறக்கும். மேலும் அரிப்பினால் சிவந்த சருமத்தையும் சீராக்கும்.

படி 3

சில ஐஸ் கட்டிகளை எடுத்து அதை ஒரு பருத்திதுணியில் சுற்றி வியர்க்குரு இருக்கும் இடத்தில் வைக்கலாம். இப்படி 20-30 நிமிடங்கள் வரை வைக்கலாம் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை விட்டுவிட்டு. ஐஸ்கட்டியின் குளிர்ச்சி அரிப்பைக் குறைக்கும் மற்றும் அரிப்பினால் சருமம் வீங்கியிருப்பதையும் சரியாக்கும்.

படி 4

இப்படி ஐஸ்கட்டி வைத்தபிறகு, கற்றாழை ஜெல்லை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். கற்றாழை ஜெல் சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

படி 5

இரவு தூங்கச் செல்லும்முன் சருமத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவி பின் துணியால் நன்கு துடைத்து உலர்த்த வேண்டும். பின்னர் காலமைன் களிம்பு வியர்க்குரு இருக்கும் இடத்தில் நல்ல அடர்த்தியாக தடவிக் கொள்ள வேண்டும். உங்கள் படுக்கை வெதுவெதுப்பாகக் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் தூங்குவது சிறந்தது.

படி 6

காலையில் எழுந்தவுடன், காலமைன் களிம்பை துடைத்து பின்னர் உப்பு சேர்த்த நீரில் குளித்துக் கொள்ள வேண்டும்குளித்து முடித்து வந்தபின் உங்கள் சருமத்தைப் பார்த்தால் நிச்சயம் வேறுபாடு இருப்பது தெரியும் வியர்க்குரு மறைந்திருக்கும். நாட்பட்ட வியர்க்குருவாக இருந்தால் நனகு குறைந்திருக்கும். இதே போல் ஒவ்வொரு இரவிலும் செய்துவந்தால முழுமையாகக் குறைந்துவிடும்.

வியரக்குருவிலிருந்து விரைவாக குணமாக குறிப்புகள் (Quick treatments for overnight prickly heat rash relief)

வியர்க்குருவிலிருந்து விடுபட சில மருத்துவக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலே ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுடன் இதையும் சேர்த்து பின்பற்றி வந்தால் சிறந்த பலன் கொடுக்கும்.

கேண்டிட் பவுடர் (Candid powder for overnight prickly heat relief)

உடலில் வியர்க்குரு ஏற்பட்டு அதற்காக மற்ற மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்ற நேரம் இல்லாமல் இருந்தால், கேண்டிட் பவுடரை வியர்க்குரு வந்த இடத்தில் தடவி பின் சுத்தமாக கழுவிக் கொள்ளலாம். குளிரூட்டப்பட்ட அறையில் தூங்குங்கள் மற்றும் சூட்டை ஏற்படுத்தாத படுக்கையைப் பயன்படுத்துங்கள்.

வெள்ளரிச் சாறு (Cucumber juice can help)

சருமத்தைக் குளிர்ச்சிப்படுத்தும் பண்புகள் வெள்ளரிச்சாறில் உள்ளது. வெள்ளரிச்சாறை வியர்க்குரு வந்த இடத்தில் தடவிக் கொள்ளவேண்டும். இது வியர்க்குருவைக் குறைக்கும் ஒரு இரவில்.

பேக்கிங் சோடா பயன்பாடு (Baking soda for quick relief from prickly heat)

வியர்க்குருவைப் போக்க பேக்கிங் சோடாவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பை நீரில் 3 தேக்கரண்டி பேக்கிங் சோடாவைப் போட்டு கலக்கி துணியை அதில் நனைக்க வேண்டும். பின்னர் இந்த துணியைக் கொண்டு வியர்க்குரு வந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வியர்வை சுரப்பிகள் அடைப்பை பேக்கிங் சோடா நீக்கும். மேலும் சரும அரிப்பைக் கட்டுப்படுத்தும்.

உருளைக்கிழங்கின் பயன் (Potato for overnight prickly heat relief)

உருளைக்கிழங்கு குளிர்ச்சியூட்டும் பண்பைப் பெற்றுள்ளது மற்றும் வியர்க்குருவைப் போக்குவதில் நல்ல பலனை அளிக்கிறது. உருளைக்கிழங்கைத் துருவி பிழிந்து சாறாக்கிக் கொள்ளவேண்டும். பஞ்சை அந்த சாறில் நனைத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் பஞ்சோடு அழுத்தி வைத்துவிடவேண்டும். இதை இரவு முழுவதும் பஞ்சு சருமத்தோடு இருக்குமாறு விட்டு காலையில் பஞ்சை எடுத்துவிட்டு சருமத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

முல்தானி மெட்டியின் பயன் (Fuller’s earth for overnight prickly heat relief)

வியர்க்குருவை நீக்கு முல்தானி மெட்டியையும் பயன்படுத்தலாம். முல்தானி மெட்டி என்பது ஒரு இயற்கை சேறு, அது சருமத்திற்கு மிக நல்லதுசிறிதளவு முல்தானி மெட்டி எடுத்து குளிர்ந்தநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பசைபோல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வியர்க்குரு வந்த இடத்தில் இதைதத் தடவவேண்டும். இது அரிப்பையும் தடுக்கும். வியர்க்குருவையும் உடனடியாகப் போக்கும். முழுமையாக உலர்வதற்கு முன்னர் கழுவிக் கொள்ள வேண்டும்.

சந்தனத்தின் பயன்பாடு (Get relief from heat rashes with sandalwood)

சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியூட்டும் ஒரு பொருள் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்து ஒன்றுதான். சந்தனத்தை ஒரு பசைபோல் ஆக்கி வியர்க்குரு இடத்தில் தடவி வரவேண்டும்விரைவாக வியர்க்குரு குணமாகும்சரும அரிப்பு, சிவப்பாகுதல், வீங்குதல் போன்றவைகளை சரியாக்கும்.

புதினா இலை பேக் (Mint leaf pack for prickly heat)

புதினா குளிர்ச்சி தரும் ஒரு இலை. வியர்க்குருவால் கஷ்டப்படுபவர்கள் இந்த புதிான இலைப் பேக்கை பயன்படுத்தலாம். நல்ல புதிய புதினா இலைகளை அரைத்து பசையாக்கிவியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். உலரும் வரை விட்டுவிட்டு பின்னர் கழுவிக் கொள்ள வேண்டும்.