Tamil tips to avoid pregnancy – கர்ப்பத்தை தவிர்க்க குறிப்புகள்

திட்டமிடாத கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் மிக பாதுகாப்பாக உறவு மேற்கொள்கிறார்கள் ஆனாலும் கர்ப்பமடைகிறார்கள். இது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மைதான்.  சில நேரங்களில் பாதுகாப்பு சாதனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன.

பல பாதுகாப்பு விசயங்கள் மேற்கொண்டாலும் பால்வினை நோய் பரவுதல் அல்லது கர்ப்பம் தரித்தல்  போன்றவை உறவிற்குப் பின் நிகழ்கின்றன. பால்வினை நோய்களுக்கு நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனையைத்தான் பெற வேண்டும். உறவிற்குப் பின் திட்டமிடா கர்ப்பம் அடைவதைத் தடுக்க இங்கே சில வீட்டு மருத்துவக் குறிப்புகள் நாங்கள் தருகின்றோம்.

பாதுகாப்பு சாதனங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும்.

பயப்பட வேண்டாம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள் கர்ப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள் (Home remedies to avoid pregnancy after intercourse)

நீல கோகோஷ் (Blue cohosh)

கரு உருவாக்கத்தைத் தடுப்பதில் நீல கோகோஷ் மூலிகை மிகத் திறனாக பலனளிக்கும். இந்த மூலிகை ஆக்ஸிடோசினை அதிகமாக சுரக்கச் செய்து கர்ப்பபையை சுருங்க வைத்து தேவையில்லாமல் கர்ப்பமடைவதைத் தடுக்கிறது.

கல்விதை வேர் (Stoneseed root)

இதுவும் கருத்தரித்தலைத் தடுக்கும் ஒரு மூலிகை. இதில் லித்தோஸ்பெர்மிக் அமிலம் உள்ளது. இதற்கு கல்விதை வேர்களை 2 – 3 மணிநேரம் நீரில் போட்டு வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு பல தடவைகள் குடிக்க வேண்டும்.

காட்டு யாம் (Wild Yam)

காட்டு யாம் வேரில் உள்ள முக்கிய பொருள் டையோஸ்ஜெனின். இது பல கருத்தடுப்பு மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கருமுட்டையையும் விந்தணுவையும் செயலிழக்க வைக்கிறது. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இதைப் பயன்படுத்துவதால் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் எந்த மாற்றமும் வராது. அதனால் உங்கள் வழக்கமான மாதவிடாய் காலத்தில் பிரச்சனை வராது. ஆனால் உடனடி தேர்விற்கு இது சரியானதல்ல. தொடர்ந்து 2-3 மாதங்கள் எடுத்துவருபவர்கள் பாதுகாப்பற்ற உறவு வைத்தாலும் கருதரிக்காது.

இதற்கு காட்டு யாம் பயன்படுத்தி மூலிகைத் தேனீர் தயாரிக்க வேண்டும்.  இந்த வேரை சூடானநீரில் 10 நமிடங்கள் போட்டு வைத்து பின் வடிகட்டி பின் குடிக்க வேண்டும். இது டானிக், மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

பருத்தி வேர் (Cotton root bark)

பருத்தி வேரை தேநீரில் அல்லது சூடான நீரில் கலந்து 2 நாளைக்கு குடித்து வரவேண்டும். இது ஆக்ஸ்டோசினை சுரக்கத்தூண்டும். கருத்தரிப்பைத் தவிர்க்க இது நல்லது.

ஏஞ்சலிகா (Angelica)

இதுவும் கர்ப்பை சுருக்கத்தை தூண்டி தேவையில்லா கருத்தரிப்பைத் தடுக்கும். கடைசியான உறவிற்குப் பின் 2 வாரத்திற்குள் இதைச் சாப்பிட வேண்டும்.

காஞ்சிரைப் பூண்டு (Mugwort)

இந்த காஞ்சிரைப் பூண்டு உலர்ந்ததை ஒரு கப் நீரில் கலந்து சாப்பிட்டால் கரு உருவாதலைத் தடுக்கும். அதிகமாக சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

இலவங்கப்பட்டை (Cinnamon)

இயற்கையாக கருத்தரி்ப்பை நிறுத்த இலவங்கப்பட்டை சிறந்த ஒன்று. ஒரு இரவு முழுவதும் லவங்கப்பட்டை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டை நீரை அருந்த வேண்டும். ஆனால் இந்த முறையைப் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

வைட்டமீன் C (Vitamin C)

உடலுக்கு பல வகைகளில் ஊட்டமளிக்கும் வைட்டமீன் C கருத்தரிப்பைத் தடுக்கவும் பயன்படும். 1500 mg வைட்டமீன் C மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய வேம்பு (Indian Lilac)

வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியவேண்டியதில்லை அதேபோல் கருத்தரித்தலைத் தடுக்கும் அம்சமும் வேம்பில் உண்டு. வேம்பு எண்ணையை பெண் பிறப்புறுப்பில் தடவினால் அது விந்தணுவின் இயக்கத்தை மட்டுப்படுத்தி கருமுட்டையோடு இணைவதைத் தடுக்கிறது.  இதைப் பயன்படுத்துவதால் மாதவிடாய் சுழற்சியில் எந்த பாதிப்பும் வராது.

கருப்பு கோகோஷ் (Black cohosh)

இந்த கருப்பு கோகோஷை பென்னிராயலுடன் சேர்ந்து எடுக்கும்போது கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கிறது. இது ஆக்ஸிடோசின் சுரப்பைத் தூண்டி கருக்கலைப்பை ஏற்படுத்துகிறது.

கஞ்சா இலைகள் (Smart weed leaves)

இதில் முக்கியமாக ருடின், கால்லிக் அமிலம் மற்றும் க்யுர்செடின் என்ற மூன்று பொருட்கள் உள்ளன இவைகள் கர்ப்பம் தரித்தலைத் தடுக்கும் திறன் கொண்டவை.

  • 4 கப் கொதிக்கும் நீரில் 4 அவுன்ஸ் கஞ்சா இலைகளைப் போடவும்
  • இலைகள் நன்கு கொதித்ததும், வடிகட்டவும்.
  • மாதவிடாய் வரும்வரை குடிக்க வேண்டும்
  • மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் இது பயன்படுகிறது

அதிமதுரம் (Parsley (Ajamoda))

இது மூலிகை தேநீராக பயன்படுத்தப்படுகிறது எளிதில் கிடைக்கக்கூடியது. கருத்தரிப்பை நன்கு தடுக்கும் எந்த பக்கவிளைவுகளும் கிடையாது.

நீரில் மூலிகையைக் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி பின் குடிக்கலாம்.

உலர் அத்திப்பழம் (Dried Fig)

உலர் அத்திப்பழமும் கருத்தரிப்பை தடுப்பதில் பயனுள்ளது. உறவிற்குப் பின் சில  உலர் அத்திப்பழங்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் வரும்வரை தினமும் சாப்பிட வேண்டும்.

பப்பாளி (Papaya to avoid pregnancy)

உறவிற்குப்பின் உடனடியாக பப்பாளி சாப்பிடுவதும் கருத்தரிப்பை தடுக்கும் என்று கூறப்படுகிறது. பப்பாளியை சாறாகவோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடலாம். உறவிற்குப்பின் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். ஒருவேளை சோதனையில் கருதரித்திருப்பது தெரியவந்தால் பப்பாளி சாப்பிட வேண்டாம்.

உலர் அப்ரிகாட் (Dried apricots)

உறவிற்குப்பின் உடனடியாக உலர் அப்ரிகாட் சாப்பிடுவதும் கரு உருவாதலைத் தடுக்கும்.  100 கிராம் உலர் அப்ரிகாட்டுடன் 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் நீர் கலந்து கலக்கவும். 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து ஒரு கப் அளவு தினமும் குடித்து வரவேண்டும் ஒரு வாரம் வரை.

இஞ்சி (Ginger root)

நம் சமையலறையில் இருக்கும் மிக சாதாரண ஒரு பொருள் இஞ்சி. ஒரு இஞ்சித்துண்டை நன்கு கழுவிக்கொள்ளவும்.  பொடிப்பொடியாக சீவி ஒரு கப் கொதிக்கும் நீரில் கலக்க வேண்டும். 2 நிமிடங்கள் கொதித்து பின் 5 நிமிடம் வரை கொதிநீரில் அப்படியே விட்டுவிட்டு பின் வடிகட்டி 2 கப் குடித்து வர வேண்டும் ஒரு வாரம் வரை.