Remove wrinkles on hands tips in Tamil – கைகளில் சுருக்கங்களை நீக்கவும்

நம் உடலில் அதிகமான புற வேலைகளைச் செய்வது கையாகும். நம்முடைய இந்த கைகளில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, சூரிய ஒளி அதிகமாகபடுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைப்பழக்கம், மற்றும் வயதாகுதல் போன்றவை சில காரணிகள். கைகளில் ஏற்படும் சுருக்கத்தைப்போக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

பொதுவாக நாம் நம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் கைகளுக்குத் தருவதில்லை. முகச் சுருக்கங்களைப் போக்க நாம் எவ்ளவு விதமான செயல்களைச் செய்கிறோம் என்பது நமக்குத் தெரியும் ஆனால் அதில் ஒருசில அளவு கூட நம் கைகளில் சுருக்கம் ஏற்படும்போது நாம் அக்கறை கொள்வதில்லை.

கைகளில் சுருக்கும் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வுதான். வயதாகுதல் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கைத் தோல்களில் சுருக்கம் ஏற்படும். முறையான சரும பராமரிப்பு இல்லையென்றாலும் இத்தகைய சுருக்கங்கள் ஏற்படும். சிலருக்கு இளம் வயதிலேயே கை தோல்களில் சுருக்கம் ஏற்படுவது சாதாரணம் அல்ல. ஆகையால் உங்கள் கைகளில் சுருக்கங்கள் தோன்றினால் கீழ்க்கண்ட சில வீட்டு மருத்துவக் குறிப்புகளை முயற்சித்துப் பாருங்கள்.

தக்காளிச் சாற்றில் கைகளை அமிழ்த்துதல் (Soak the wrinkled hands in fresh tomato juice)

தக்காளியில் லைக்கோபேன் அதிகமாக உள்ளது, இது கைகளில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மருந்தாக அமையும். தக்காளியை நன்கு பிழிந்து சாறாக்கி கைகளில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின் கழுவிக் கொள்ளலாம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னால் இப்படி 15-20 நாட்களுக்கு செய்து வர வேண்டும்.

புகைபழக்கத்தை விடுதல் (Quit smoking)

தோல் சுருக்கத்திற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்று புகைப்பழக்கம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் இன்றே புகைப்பழக்கத்தை விட்டொழியுங்கள்.

பழச்சாறு உணவில் சேர்த்தல் (Include as much of fruit juice in your diet)

உடலில் நீர் சத்து குறைவது தோலில் சுருக்கங்கள் ஏற்பட ஒரு காரணமாகும். கைகள் அதிகமாக நேரடி சூரியஒளியில் படும்படி இருப்பதால் உடலில் நீர்சத்து சரியான அளவு இருக்கும்படி பார்த்துக் கொண்டால்தான் சருமத்தைப் பாதுகாக்க முடியும். உணவில் அதிகமான பழச்சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு நீர் அருந்தும்போது உடலில் நச்சுத் தன்மைகள் வெளியேறுகின்றன. சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களைத் தவிர்த்தல் (Stay away from the chemical-based cosmetics)

நீங்கள் அழகிற்காக வேண்டி சந்தைகளில் கிடைக்கும் பலவித அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் ஆனால் அதில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்களால் சருமத்திற்கு பாதிப்புதான் நாளடைவில் ஏற்படும். முடிந்தஅளவு செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் சருமத்தில் வீக்கம் தடிப்புகள் ஏற்பட காரணமாகவும் இவை அமைந்து விடுகின்றன. ஆகவே, செயற்கை அழகு சாதனப் பொருட்களை விட இயற்கையான வீட்டு அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.

ஈரப்பத களிம்புகள் பயன்படுத்துதல் (Apply moisturizer to remove fine lines)

சுருக்கங்களைக் குறைக்க நீங்கள் விரும்பினால், உங்கள் சருமத்திற்கேற்ற ஈரப்பத களிம்புகளைப் பயன்படுத்துங்கள். தோலில் ஈரப்பதம் குறையும்போது தோலின் இழுவைப்பண்பு குறைந்து சுருக்கங்களுக்கு வழிவகை செய்கிறது. இரவு உறங்கச் செல்லும்போது தரமான அத்தகைய களிம்புகளை கைகளில் தடவிக் கொள்ளலாம். தினமும் தடவி வந்து புதிதாக ஏதும் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கலாம்.

எண்ணைய் சிகிச்சை (Oil treatment for wrinkles)

எண்ணைய்த் தோல்கள் அவ்வளவு விரைவாக சுருக்கமடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? தேங்காய் எண்ணைய், ஆலிவ், நல்லெண்ணைய் அல்லது விளக்கெண்ணைய் என்று உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு எண்ணையைத் தேர்ந்தெடுத்து கைகளில் நன்கு தேய்த்துக் கொள்ளலாம்.

இரவில் உறங்கச் செல்லும்முன் தேய்த்து பின் காலையில் எழுந்ததும் கழுவிக் கொள்ளலாம். இப்படி தினமும் தேய்த்து வரும்போது எண்ணைய் சருமத்தில் ஊடுருவி சுருக்கங்களைக் குறைப்பதை நீங்கள் உணரலாம். புதிதாக சுருக்கங்கள் வருவதையும் தடுக்கும்.

தேய்த்தல் (Scrub)

எண்ணைய் சிகிச்சையுடன் கடலை மாவு கொண்டு கைகளைத் தேய்த்து கழுவி வந்தாலும் சுருக்கங்கள் குறையும்.

உடற்பயிற்சி (Exercise)

உடற்பயிற்சிக்கும் சுருக்கங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உடற்பயிற்சி மூலமாக இரத்த ஓட்டம் மேம்படும்போது சுருக்கங்கள் குறையும்.

சூரிய ஒளியைத் தவிர்த்தல் (Exposure to sun)

கைகளுக்கு நீளமான கையுறை அணிந்து வெளியே செல்ல வேண்டும். சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் களிம்புகளைத் தடவிக் கொள்ள வேண்டும்.

சமையலறை பொருட்கள் மூலம் சுருக்கங்களை நீக்கும் வழிகள் (Kitchen secrets to remove wrinkles on the hands)

  • அரை எலுமிச்சையைப் பிழிந்து அதனுடன் 1 தேக்கரண்டி சர்க்கரை கலந்து அதை கைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கும் சர்க்கரை தேய்ப்ப்பானாக செயல்படும்.
  • பாதி எலுமிச்சை மற்றும் 2 தேக்கரண்டி பாலுடன் கலந்து அதை கைகளில் தடவி 20 நிமிடங்கள் வரை காய விட்டு பின் கழுவிக் கொள்ளலாம்.

இயற்கையான முறையில் சுருக்கங்கள் நீக்கதல் (Ways of removing wrinkles naturally)

பெரும்பாலான பெண்கள் சுருக்கங்கள் அற்ற சருமத்திற்காக பணம் அதிகமாக செலவழிப்பதோடு பல அபாயகரமான முறைகளையும் பின்பற்றுகின்றனர். போடாக்ஷ் உள்செலுத்துதல், தெர்மல் நிரப்பி சிகிச்சை போன்றவை சில உதாரணங்கள். இவை தற்காலிக பலனைக் கொடுக்கலாம் ஆனால் பிற்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, நீங்கள் இத்தகைய ஆபத்தான முறைகளைவிட்டு சில எளிமையான இயற்கை சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம்.

ஓட்ஸ் (Oatmeal)

உங்கள் சருமத்திலிருந்து சுருக்கங்களை நீக்க இது மிக எளிமையான வழி. 1 முட்டை மஞ்சள் கரு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் ஆலிவ் எண்ணைய் இவை மூன்றையும் ஓட்ஸுடன் கலந்து பசை போலாக்கி கைகளில் தடவிக் கொள்ளுங்கள். தடவி மசாஜும் செய்யலாம். நல்ல பலன் தரும்.

கற்றாழை ஜெல் (Aloe vera gel)

சருமத்தில் கற்றாழை ஜெல் தடவுவது ஈரப்பதமாக சருமம் இருக்க உதவும். கற்றாழை ஜெல்லில் மாலிக் அமிலம் உள்ளது, இது சுருக்கம் ஏற்படாமல் இருக்க உதவும். கற்றாழை ஜெல் எடுத்து நன்கு கலக்கி ஒரு க்ரீம் போல் ஆகியதும் கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.

கேரட் (Carrot)

1 அல்லது 2 கேரட் எடுத்து நன்கு மெதுவாகுமளவு வேக வைக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிது தேன் கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதை கைகளில் தடவி மசாஜ் செய்யவேண்டும். பின்னர், உலர்ந்ததும் கழுவிக் கொள்ளலாம்.

அன்னாசியின் பலன் (Pineapple to get younger skin)

கைகளில் உள்ள சுருக்கங்களை எப்படி போக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வைட்டமீன் சி அதிகமுள்ள ஒரு பழம் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அன்னாசி பழத்தை நன்கு குழைத்து கைகளில் தடவினால் சுருக்கங்கள் மறையும். அன்னாசி பழச்சாறை கைகளில் தடவி மசாஜ் செய்யலாம்.

வாழைப்பழத்தின் பலன் (Banana for younger looking hands)

கடைகளில் மிக எளிதாக எப்போதும் கிடைக்கும் ஒரு பழம் வாழை. இதில் இரும்புச்சத்து மற்றும் பல தாதுப்பொருட்கள் உள்ளன. வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதாவது ஒரு பசைபோல் ஆகும்வரை பிசைந்து கைகளில் தடவிக் கொள்ளலாம். தடவிய வாழைப்பழம் நன்கு உலரும் வரை விட்டுவிட்டு கைகளைக் கழுவிக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் (Cucumber to reduce wrinkles)

நம்மில் பெரும்பாலானவர்கள் உணவோடு கண்டிப்பாக வெள்ளரிக்காயை சாலட் சாப்பிடுவோம். உணவில் வெள்ளரிக்காய் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிக நன்று. வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி கைகளில் வைக்க வேண்டும். சுருக்கங்கள் குறையும்.

விரல்களில் சுருக்கம் நீங்க ஆலிவ் எண்ணைய் ( Olive oil to remove wrinkles on fingers)

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றி கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். சருமத்திற்கு ஊட்டம் அளிப்பதுடன் சுருக்கங்களையும் இந்த எண்ணைய் போக்குகிறது. தினமும் உறங்கச் செல்லும் முன் ஆலிவ் எண்ணையை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். மசாஜும் செய்யலாம்.

தர்பூசணி (Watermelon to get wrinkle free hands)

தர்பூசணி ஒரு துண்டு வெட்டி கைகளில் சுருக்கம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். 5-7 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு 2 தடவை இப்படி செய்யலாம்.

விரல் சுருக்கம் போக்கும் அரிசி (Treat finger wrinkles with rice)

அரிசியை பொடியாக திரித்து அதனுடன் கொஞ்சம் பன்னீர் மற்றுமு் 1 தேக்கரண்டி அளவு பால் சேர்த்து பசைபோல் ஆக்கி கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் விட்டு பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளலாம்.