Kesar for pregnant women in Tamil – கர்ப்பிணி பெண்களுக்கு கேசர்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப் பூ சாப்பிடுகிறார்கள்கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் பிரச்சனைகளை குங்குமப் பூ தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆமாம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிடுவது பாதுகாப்பானதுதான்.

ஒரு மூலிகையாக குங்குமப் பூவில் பல வகை குணங்கள் உள்ளன. நெடுங்காலமாக பல்வேறு காயங்களுக்கு மருந்தாக இந்த குங்குமப் பூ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பமாகும் இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டு வரும்போது அவர்களின் தசைகள் தளர்வாகின்றன.

கர்ப்பவதிகள் குங்குமப் பூ சாப்பிடலாமா? (Can pregnant women consume saffron?

பொதுவாக குங்குமப் பூவின் விலை சந்தையில் மிக அதிகமாக உள்ளது ஏனெனில் இதைத் தயாரிக்க மிக அதிக செலவாகும். குழந்தைகள் அழகாக வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று பல பெண்கள் குங்குமப் பூவை அதிகமாக சாப்பிடுகின்றனர்கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பொதுவாக எல்லாவற்றையும் மிதமாக சரியான அளவுதான் சாப்பிட வேண்டும் அதேபோல் குங்குமப்ப பூவையும் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, தினமும் இரவு 1 டம்ளர் பாலில் ஒரு சில குங்குமப் பூ குச்சி இதழ்களைப்போடடு குடிக்கலாம்.

குங்குமப் பூவினால் பக்கவிளைவுகள் உண்டா? (Does saffron have any side effects?)

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பக்கவிளைவுகள் வரும், அது குங்குமப் பூவிற்கும் பொருந்தும். 12கிராம் விட அதிகமாக குங்குமப் பூ சாப்பிடுவது விசமாக மாறிவிடும்கருப்பையை சுருக்கிவிடும்அதிகமாக குங்குமப் பூ உட்கொண்டால் தலைசுற்றல், மயக்கம், வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும். குங்குமப் பூ சாப்பிட நினைப்பவர்கள் முதலில் ஒரு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்து பிறகு பயன்படுத்தலாம்.

கர்ப்பவதிகள் எவ்வளவு குங்குமப் பூ சாப்பிடலாம்? (How much saffron should a pregnant woman consume?)

கர்ப்பகாலத்தில் எந்த ஒரு பொருளையும் அளவோடு எடுக்க வேண்டும். இது நீங்கள் ஒருவர் அல்ல உங்கள் குழந்தைக்கும் ஊட்டம் செல்ல வேண்டும். 1 டம்ளர் பாலில் ஒரு சில குச்சி இதழ்கள் குங்குமப் பூ போட்டு குடிக்கலாம் அல்லது சோறு சாப்பிடும்போது சில குச்சி இதழ்கள் போட்டும் சாப்பிடலாம். ஸ்பெயின் நாட்டில் பெண்கள் பாயில்லா என்ற உணவில் குங்குமப் பூ போட்டு தயாரிப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் குங்குமப் பூவை தரமான நிறுவனமல்லாதவர்களிடமிருந்து வாங்காதீர்கள். அரசு அனுமதி பெற்ற தரமான நிறுவனத்தின் குங்குமப் பூவை வாங்குங்கள். காலாவதியாகும் தேதியை கவனித்துக் கொள்ளுங்கள்.

குங்குமப் பூ சாப்பிடுவதின் நோக்கம் (Purpose of consuming saffron)

பல வகை காரணங்களுக்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. சீரண மண்டலதத்தி்ன செயல்பாடுகளை மேம்படுத்தி நன்கு பசியைத் தூண்டும் இந்த குங்குமப் பூ. மேலும் கர்ப்பவதிகள் மனஓட்டம் பலவாறாக மாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய மனநிலையை நிலைப்படுத்தவும் குங்குமப் பூ உதவுகிறது.

எப்போது குங்குமப் பூ சாப்பிட வேண்டும் (When should you consume kesar?)

கர்ப்பமான பெண்கள் இரண்டாம் மூன்று மாதத்திலிருந்து சாப்பிடலாம். அதாவது 4ம் மாத ஆரம்பத்திலிருந்து. காலையிலோ அல்லது மாலையிலோ சூடான பாலில் ஒரு சில குங்குமப் பூ குச்சி இதழ்களைப் போட்டு குடிக்கலாம். கர்ப்பவதிகளுக்கான உணவு சமைக்கும்போது கூட சில குங்குமப் பூ இதழ்களை போட்டு சமைக்கலாம்.

குங்குமப் பூ வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் .சில கடைகளில் பாக்கெட்டுகளில் இல்லாதவற்றை விற்பனை செய்வார்கள். அவை கர்ப்பவதிகளுக்கு உடல் உபாதையைத் தந்துவிடும். ஆகவே, தரமான நிறுவனமா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டுவந்தால் வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள்.

குங்குமப் பூவை குறைவான அளவே உணவிலோ பாலிலோ சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக அதிகமாக சேர்க்கக் கூடாது. இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

சில நேரங்களில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பசும்பால் குடிக்கும்போது அது ஜீரணமாகுவது சிரமமாக இருக்கும். அத்தகைய நிலைகளில் ஒரு சில குங்குமப் பூ இதழ்களை பாலில் போட்டு குடிக்கும்போது ஜீரணம் நன்கு இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப் பூ சாப்பிடுவதன் நன்மைகள் (The benefits of consuming Saffron during pregnancy)

மனஅழுத்தம், பதற்றம் குறைதல் (Relieves stress, anxiety and depression)

கர்ப்பம் மற்றும் கர்ப்பகாலம் என்பது வெறும் உடல் சார்ந்த செயல்பாடு அல்ல, மனது மற்றும் சிந்தனை சார்ந்த செயல்பாடும் அடங்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பல வித மனநிலைக்கு ஆளாகுவார்கள் மற்றும் அதனால் ஒருவித மனக்குழப்பம், அழுத்தம் போன்றவை ஏற்பட்டு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது, குங்குமப் பூ சாப்பிட்டுவந்தால் இத்தகைய மன அழுத்தங்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சருமத்தின் ஆரோக்கியம் (Restores the appearance of the skin)

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில தோல் நோய்கள் ஏற்படும். சருமத்தின் பொலிவு குறைந்து காணப்படும் அதனால் பெண்கள் பொலிவிழந்து இருப்பர். இத்தகைய நேரங்களில் உங்களுக்கு முக பேக்குகள் உபயோகிக்கும் போது அதில் குங்குமப் பூவை கலந்து பயன்படுத்தலாம். சருமம் பொலிவு பெறும்.

அசிடிட்டியை தடுக்கும் (Prevents acidity)

கர்ப்ப காலத்தில் ஜீரணம் மெதுவாக நடைபெறும். ஹார்மோன்களின் மாறுபாட்டால் இரைப்ப எளிதில் அசிடிட்டி பிரச்சனைக்கு ஆட்படும். தொடர்ந்து குங்குமப் பூ சாப்பிட்டு வருவதால் இத்தைகய கர்ப்பகால அசிடிட்டி பிரச்சனையை சரியாக்கலாம்.

பசியை தூண்டுதல் (Enhances appetite)

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்து அவசியம். ஆனால் கர்ப்ப காலத்தின் போது சாதாரண நேரங்களை விட பசி குறைவாகவே எடுக்கும் அதனால் பெண்களும் குறைவாகவே உணவு உட்கொள்வார்கள் அதனால் சரியான ஊட்டம் உடலுக்கு கிடைக்காமல் போகும். குங்குமப் பூ சாப்பிடுவதால் பசி தூண்டப்பட்டு சரியான அளவு சாப்பிட முடியும்.

மனநிலை மாற்றம் சீராகுதல் (Stops mood swings)

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மனநிலை பலவகையாக மாறிக் கொண்டே இருக்கும். இத்தகைய மன மாற்றங்களை குங்குமப் பூ சீராக்கும் என்று கூறப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மனமாற்றங்களால் கருவில் உள்ள குழந்தையிடமும் அந்த மாற்றங்கள் பிரதிபலிக்கும். இதை குங்குமப் பூ சீராக்கும்.

இரத்த அழுத்தம் சீராகுதல் (Manage blood pressure)

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் இதயத்துடிப்பு சாதாரண நிலையை விட 25% வரை அதிகமாக இருக்கும் .இதனால் இரத்த அழுத்தமு் அதிகமாகும். கர்ப்பவதிகளின் இரத்த அழுத்தம் சீராக இருக்கவேண்டியது மிக முக்கியமான ஒன்று. குங்குமப் பூவில் உள்ள க்ரோசிடான் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

அடிவயிறு வலியைக் குறைக்கும் (Soothes cramps)

பொதுவாக ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் அடிவயிறு வலியால் அவதிப்படுவார்கள். கர்ப்ப காலத்திலும் இத்தகைய அடிவயிறு வலி வரலாம். குங்குமப் பூ இத்தகைய வலியைக் குறைக்கும்.

காலை சோம்பலை நீக்கும் (Clams morning sickness)

கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய நிலை இருக்கும். காலை தேநீரில் சில குங்குமப் பூவை இட்டு குடித்து வந்தால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புத்துணர்வு ஆவார்கள் மற்றும் காலை நேர மயக்கமான நிலையும் மாறும். காலையில் இப்படி தேநீரில் குடிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்.

இரவுத் தூக்கம் (Get a good night sleep)

இரவில் நல்ல தூக்கத்தை விட சிறந்தது எதுவுமில்லை. ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சரியான இரவுத் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவர். இரவில் ஒரு டம்ளர் பாலில் சில குங்குமப் பூவை போட்டு குடித்து வந்தால் இரவுத் தூக்கம் மேம்படும்.

இரும்புச் சத்து (Increase iron level)

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தேவையான அளவு இரும்புச் சத்தைப் பெறவேண்டும். இது கருவில் உள்ள குழந்தைக்கும் மிக அவசியமான ஒன்று. குங்குமப் பூவில் அதிக இரும்புச் சத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

முடி உதிர்தலைத் தடுக்கும் (Prevents hair fall)

ஹார்மோன்கள் மாற்றத்தால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக தலைமுடி உதிரும். இத்தகைய கர்ப்பகால தலைமுடி உதிர்வை குங்குமப் பூ தடுக்கும். குங்குமப் பூ, பால் மற்றும் லிகோரைஸ் கலந்த கலவையை தலையில் தேய்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.

Tamil tips to avoid pregnancy – கர்ப்பத்தை தவிர்க்க குறிப்புகள்

திட்டமிடாத கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் மிக பாதுகாப்பாக உறவு மேற்கொள்கிறார்கள் ஆனாலும் கர்ப்பமடைகிறார்கள். இது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மைதான்.  சில நேரங்களில் பாதுகாப்பு சாதனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன.

பல பாதுகாப்பு விசயங்கள் மேற்கொண்டாலும் பால்வினை நோய் பரவுதல் அல்லது கர்ப்பம் தரித்தல்  போன்றவை உறவிற்குப் பின் நிகழ்கின்றன. பால்வினை நோய்களுக்கு நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனையைத்தான் பெற வேண்டும். உறவிற்குப் பின் திட்டமிடா கர்ப்பம் அடைவதைத் தடுக்க இங்கே சில வீட்டு மருத்துவக் குறிப்புகள் நாங்கள் தருகின்றோம்.

பாதுகாப்பு சாதனங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும்.

பயப்பட வேண்டாம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள் கர்ப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள் (Home remedies to avoid pregnancy after intercourse)

நீல கோகோஷ் (Blue cohosh)

கரு உருவாக்கத்தைத் தடுப்பதில் நீல கோகோஷ் மூலிகை மிகத் திறனாக பலனளிக்கும். இந்த மூலிகை ஆக்ஸிடோசினை அதிகமாக சுரக்கச் செய்து கர்ப்பபையை சுருங்க வைத்து தேவையில்லாமல் கர்ப்பமடைவதைத் தடுக்கிறது.

கல்விதை வேர் (Stoneseed root)

இதுவும் கருத்தரித்தலைத் தடுக்கும் ஒரு மூலிகை. இதில் லித்தோஸ்பெர்மிக் அமிலம் உள்ளது. இதற்கு கல்விதை வேர்களை 2 – 3 மணிநேரம் நீரில் போட்டு வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு பல தடவைகள் குடிக்க வேண்டும்.

காட்டு யாம் (Wild Yam)

காட்டு யாம் வேரில் உள்ள முக்கிய பொருள் டையோஸ்ஜெனின். இது பல கருத்தடுப்பு மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கருமுட்டையையும் விந்தணுவையும் செயலிழக்க வைக்கிறது. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இதைப் பயன்படுத்துவதால் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் எந்த மாற்றமும் வராது. அதனால் உங்கள் வழக்கமான மாதவிடாய் காலத்தில் பிரச்சனை வராது. ஆனால் உடனடி தேர்விற்கு இது சரியானதல்ல. தொடர்ந்து 2-3 மாதங்கள் எடுத்துவருபவர்கள் பாதுகாப்பற்ற உறவு வைத்தாலும் கருதரிக்காது.

இதற்கு காட்டு யாம் பயன்படுத்தி மூலிகைத் தேனீர் தயாரிக்க வேண்டும்.  இந்த வேரை சூடானநீரில் 10 நமிடங்கள் போட்டு வைத்து பின் வடிகட்டி பின் குடிக்க வேண்டும். இது டானிக், மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

பருத்தி வேர் (Cotton root bark)

பருத்தி வேரை தேநீரில் அல்லது சூடான நீரில் கலந்து 2 நாளைக்கு குடித்து வரவேண்டும். இது ஆக்ஸ்டோசினை சுரக்கத்தூண்டும். கருத்தரிப்பைத் தவிர்க்க இது நல்லது.

ஏஞ்சலிகா (Angelica)

இதுவும் கர்ப்பை சுருக்கத்தை தூண்டி தேவையில்லா கருத்தரிப்பைத் தடுக்கும். கடைசியான உறவிற்குப் பின் 2 வாரத்திற்குள் இதைச் சாப்பிட வேண்டும்.

காஞ்சிரைப் பூண்டு (Mugwort)

இந்த காஞ்சிரைப் பூண்டு உலர்ந்ததை ஒரு கப் நீரில் கலந்து சாப்பிட்டால் கரு உருவாதலைத் தடுக்கும். அதிகமாக சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

இலவங்கப்பட்டை (Cinnamon)

இயற்கையாக கருத்தரி்ப்பை நிறுத்த இலவங்கப்பட்டை சிறந்த ஒன்று. ஒரு இரவு முழுவதும் லவங்கப்பட்டை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டை நீரை அருந்த வேண்டும். ஆனால் இந்த முறையைப் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

வைட்டமீன் C (Vitamin C)

உடலுக்கு பல வகைகளில் ஊட்டமளிக்கும் வைட்டமீன் C கருத்தரிப்பைத் தடுக்கவும் பயன்படும். 1500 mg வைட்டமீன் C மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய வேம்பு (Indian Lilac)

வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியவேண்டியதில்லை அதேபோல் கருத்தரித்தலைத் தடுக்கும் அம்சமும் வேம்பில் உண்டு. வேம்பு எண்ணையை பெண் பிறப்புறுப்பில் தடவினால் அது விந்தணுவின் இயக்கத்தை மட்டுப்படுத்தி கருமுட்டையோடு இணைவதைத் தடுக்கிறது.  இதைப் பயன்படுத்துவதால் மாதவிடாய் சுழற்சியில் எந்த பாதிப்பும் வராது.

கருப்பு கோகோஷ் (Black cohosh)

இந்த கருப்பு கோகோஷை பென்னிராயலுடன் சேர்ந்து எடுக்கும்போது கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கிறது. இது ஆக்ஸிடோசின் சுரப்பைத் தூண்டி கருக்கலைப்பை ஏற்படுத்துகிறது.

கஞ்சா இலைகள் (Smart weed leaves)

இதில் முக்கியமாக ருடின், கால்லிக் அமிலம் மற்றும் க்யுர்செடின் என்ற மூன்று பொருட்கள் உள்ளன இவைகள் கர்ப்பம் தரித்தலைத் தடுக்கும் திறன் கொண்டவை.

  • 4 கப் கொதிக்கும் நீரில் 4 அவுன்ஸ் கஞ்சா இலைகளைப் போடவும்
  • இலைகள் நன்கு கொதித்ததும், வடிகட்டவும்.
  • மாதவிடாய் வரும்வரை குடிக்க வேண்டும்
  • மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் இது பயன்படுகிறது

அதிமதுரம் (Parsley (Ajamoda))

இது மூலிகை தேநீராக பயன்படுத்தப்படுகிறது எளிதில் கிடைக்கக்கூடியது. கருத்தரிப்பை நன்கு தடுக்கும் எந்த பக்கவிளைவுகளும் கிடையாது.

நீரில் மூலிகையைக் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி பின் குடிக்கலாம்.

உலர் அத்திப்பழம் (Dried Fig)

உலர் அத்திப்பழமும் கருத்தரிப்பை தடுப்பதில் பயனுள்ளது. உறவிற்குப் பின் சில  உலர் அத்திப்பழங்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் வரும்வரை தினமும் சாப்பிட வேண்டும்.

பப்பாளி (Papaya to avoid pregnancy)

உறவிற்குப்பின் உடனடியாக பப்பாளி சாப்பிடுவதும் கருத்தரிப்பை தடுக்கும் என்று கூறப்படுகிறது. பப்பாளியை சாறாகவோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடலாம். உறவிற்குப்பின் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். ஒருவேளை சோதனையில் கருதரித்திருப்பது தெரியவந்தால் பப்பாளி சாப்பிட வேண்டாம்.

உலர் அப்ரிகாட் (Dried apricots)

உறவிற்குப்பின் உடனடியாக உலர் அப்ரிகாட் சாப்பிடுவதும் கரு உருவாதலைத் தடுக்கும்.  100 கிராம் உலர் அப்ரிகாட்டுடன் 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் நீர் கலந்து கலக்கவும். 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து ஒரு கப் அளவு தினமும் குடித்து வரவேண்டும் ஒரு வாரம் வரை.

இஞ்சி (Ginger root)

நம் சமையலறையில் இருக்கும் மிக சாதாரண ஒரு பொருள் இஞ்சி. ஒரு இஞ்சித்துண்டை நன்கு கழுவிக்கொள்ளவும்.  பொடிப்பொடியாக சீவி ஒரு கப் கொதிக்கும் நீரில் கலக்க வேண்டும். 2 நிமிடங்கள் கொதித்து பின் 5 நிமிடம் வரை கொதிநீரில் அப்படியே விட்டுவிட்டு பின் வடிகட்டி 2 கப் குடித்து வர வேண்டும் ஒரு வாரம் வரை.

Tamil tips to avoid pregnancy after 15/20 days – 15/20 நாட்களுக்கு பிறகு கர்ப்பத்தை எப்படி தவிர்க்க வேண்டும்

நீங்கள் கர்ப்பம் தரிக்க தற்போது விரும்பாத நிலையில், உங்கள் இணையுடன் உறவு கொண்ட பின் கர்ப்பம் ஆகிவிடுவோமோ என்ற ஒரு அச்சம் இருந்தால் இந்த வீட்டு மருத்துவ குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் கர்ப்பம் ஆகாமல் தடுக்கலாம்.

ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to keep in mind)

காலண்டர் முறை மற்றும் தெர்மோமீட்டர் முறையில் சீக்கிரமே கண்டறிவது:

காலண்டர் முறை (Calendar method)

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கண்டிப்பாக குறித்து வைத்துக் கொண்டு வரவேண்டும்.  அதன் மூலம் எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் என்பது தெரிவதன் மூலம் கர்ப்பமடைவதைத் தடுக்கலாம்.   குறைந்த பட்சம் முந்தைய  8 மாதவிடாயின் கால அளவுகளைக் குறித்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சி  27 நாட்களை விட குறைவு எனில் இந்த முறையைப் பின்பற்ற இயலாது.

வெப்ப முறை (Temperature method)

பெண்களின் கருமுட்டை வெடித்து வெளிவரும்போது உடலின் வெப்பநிலை உயரும். அடுத்த மாதவிடாய் வரும்போது வெப்பநிலை குறையும். இந்த உடல் வெப்பநிலையை குறித்து வைத்து வந்தால் கர்ப்பமடைவதைத் தடுக்கலாம். உடலின் வெப்பநிலையைப் பார்க்க தெர்மோமீட்டரை நாக்கின் அடியில் வைத்து பார்க்க வேண்டும்.

கர்ப்ப தடுப்பு முறைகள் (Preventive method)

பாதுகாப்பற்ற உறவுக்குப் பிறகு வருத்தப்படுவதை விட, பாதுகாப்பான உறவு மேற்கொள்வது புத்திசாலித்தனம்!  தரமான ஆணுறைகளை உறவின்போது பயன்படுத்த வேண்டும். ஆணுறை என்பது கர்ப்பத்தடைக்காக மட்டுமல்ல பால்வினை நோய்கள் பரவுவதையும் தடுக்கும்.

இயற்கை முறையில் கருத்தடுப்பு  (Natural ways for birth control)

இயற்கையான சில மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலமும் கரு உருவாதலைத் தடுக்க இயலும். அந்தக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ள கீழே தொடர்ந்து வாசியுங்கள்.

உலர் அப்ரிகாட் (Dried apricot)

அப்ரிகாட் பழம் கருத்தடுப்பிற்கு பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவ சோதனையில் கரு உருவானது என்று தெரிந்த பிறகு அப்ரிகாட் பழம் பயன்படாது.  100 கிராம் அப்ரிகாட்டுன் 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து சாப்பிட வேண்டும். அதிகமான உதிரப்போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

நீல கோகோஷ் (Blue cohosh)

நீல கோகோஷ் மூலிகை கொண்டு தேநீர் தயாரித்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை அருந்த வேண்டும்.  இந்த தேநீர் அருந்தும் முன் மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். 2 டீஸ்பூன் நீல கோகோஷ்  மூலிகை எடுத்து 3-4 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

கல்விதை வேர் (Stoneseed root)

கர்ப்பத்தை தடுப்பதில் இந்த கல்விதைவேர் மிக திறனுடையதுஇந்த மூலிகையை சாதாரண நீரில் 5 – 6 மணிநேரம் போட்டு வைத்து பின் வடிகட்டிய நீரைக் குடிக்க வேண்டும்இப்படி தினமும் குடித்து வந்தால் கர்ப்பம் தரிப்பதை தவிர்த்து வரலாம்.

இலவங்கப்பட்டை (Cinnamon)

இதுவும் ஒரு கரு உருவாதலை தள்ளிப்போட சிறந்தது ஆனால் ஒரு சில நாட்களுக்கு தள்ளிப்போட விரும்புபவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.  இலவங்கப்பட்டையை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டிய பின் நீரைப் பருகி வரவேண்டும்இது கருப்பையை தூண்டுவதிலும் பயனளிக்கும்.

இந்திய வேம்பு (Indian lilac)

வேப்ப எண்ணையை பெண் குறியில் தடவிக் கொள்வதன் மூலம் விந்தணுக்களின் இயக்கம் தடைபட்டு கரு உருவாதல் தடுக்கப்படும்.  இப்படி வேப்ப எண்ணைய் தடவுவதால் பெண்களின் மாதவிடாயில் எந்தப் பிரச்சனையும் இது ஏற்படுத்தாது.

அதிமதுரம் (Parsley)

அதிமதுரம் கரு உருவாதலைத் தடுக்கும் அற்புத மூலிகை.   நீரில் 10 – 15 நிமிடங்கள் இதை ஊற வைத்து  கொதி வரும்வரை சூடாக்கி பின் நீரில் கொஞ்சம் சர்க்கரை கலந்து பருகலாம்.

பருத்தி வேர்பட்டை (Cotton root bark)

பருத்தி வேர் பட்டையை வெதுவெதுப்பான நீரில் அல்லது தேநீரில் அமிழ்த்தி அந்தி நீரைப் பருக வேண்டும். ஒரு வாரம் வரை தொடர்ச்சியாக பருகி வரவேண்டும்.

ஏஞ்சலிகா மூலிகை (Angelica)

கரு உருவாதலைத் தடுப்பதில் இந்த மூலிகையும் சிறந்தது.  கருப்பை விரிவடைய இது தூண்டுகிறது அதனால் கருக்குழாய் சுருங்குகிறது.  2 வாரங்கள் தொடர்ச்சியாக எடுத்து வர வேண்டும்.

மக்வோர்ட் இலை (Mugwort)

மக்வோர்ட் என்ற தாவர மூலிகையைப் பயன்படுத்தலாம். இது ஐரோப்பிய நாடுகளில் வளரும் ஒன்று. ஆனால் அதிகமாக இதைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இதைப் பயன்படுத்தும் முன் மருத்துவரை கலந்தலோசித்துக் கொள்ள வேண்டும்.

கஞ்சா இலை (Weed leaves)

கஞ்சா புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என சில  மக்கள் கஞ்சா தடையை நீக்க வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் எல்லாம் செய்கின்றனர்.  இந்த இலையை நீரில் ஊறவைத்து வடிகட்டி காலையில் உணவிற்கு முன்னும் இரவிலும் குடிக்கலாம்.  மாதவிடாய் சுழற்சியை நெறிப்படுத்தும்.

வைட்டமீன் C (Vitamin C)

எந்தக் கலப்பும் அற்ற தனி வைட்டமீன்  C 1500mg வாங்கி உறவிற்குப் பின் மூன்று நாட்கள் தொடர்ந்து நாளைக்கு 2 வேளை எடுத்து வரவேண்டும். பின்னர் வழக்கமாக சோதனை செய்து கரு உருவாகியுள்ளதா என சோதித்துக் கொள்ளலாம். குறித்துக் கொள்ளுங்கள் ஒருவேளை கரு உருவாகி அந்த கருவைக் கலைக்க இதைப் பயன்படுத்தக்கூடாது ஆரோக்கியத்திற்கு மிக கேடானது.

உலர் அன்சீர் (Dried anzeer)

உலர்ந்த அன்சீர் கரு உருவாதலைக் கட்டுப்படுத்தும். உறவு வைத்துக்கொண்ட நாளிலிருந்து தினமும் 2 அல்லது 3 பாகம் சாப்பிட்டு வரவேண்டும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவல்லது.  ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் சாப்பிட வேண்டும் ஏனெனில் இது வயிறு கோளாறை சற்று ஏற்படுத்தும். கருத்தரிக்க விரும்புபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடக்கூடாது.

பப்பாளி (Papaya)

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் எல்லா பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள். இந்தப் பழம் கரு உருவாதலைத் தடுக்கும். உறவிற்குப்பின் தினமும்  2 வேளை நன்கு பழுத்த பப்பாளி சாப்பிட வேண்டும்  இது கரு உருவாதலை தடுப்பதற்கான சாத்தியங்களை அதிகம் கொண்டுள்ளது.

கேரட் விதைகள் (Carrot seeds)

காட்டு கேரட் விதைகள் கருதடுப்பிற்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.  உறவிற்குப் பின் பெண்கள் கேரட் விதைகளை சாப்பிட வேண்டும். தற்காலிகமாக கர்ப்பமடைய வேண்டாம் என்று விரும்புபவர்கள் இதைச் சாப்பிட்டு வரலாம்.  1 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

Tamil tips to avoid pregnancy after one month without abortion – ஒரு மாதத்திற்கு பிறகும் கருக்கலைப்பு இல்லாமல் கர்ப்பமடைவதை தடுப்பது எப்படி

இன்றைய முன்னேறிய தொழில்நுட்ப உலகில், கர்ப்பமடைவதை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. ஆனால், சில நேரங்களில் இந்த நடவடிக்கைகள் பலன்தராமல் போகலாம்.கர்ப்பத்தடை மாத்திரைகளின் உதவியுடன் புணர்ச்சிக்குப்பிறகு 48-72 மணி நேரங்கள் வரை கருத்தரித்தலை தவிர்க்கமுடியும்.

சில நேரங்களில் உங்கள் உடல்நிலை,கரு திடமாக வளர்வதற்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அந்த நேரங்களில் நீங்கள் கருத்தரித்தலை ஒரு மாதத்திற்கு பிறகும் தவிர்க்க நேரிடலாம். கருத்தடை மாத்திரைகளும் வேலை செய்யாதபோது கருக்கலைப்பு மட்டுமே ஒரே வழி.ஆனால், கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் கடினமான முடிவாகும்.

கரு உயிர்பெறும் முன்னரே கர்ப்பத்தை முடித்திக்கொள்ளவது கருக்கலைப்பு எனப்படும். கருத்தரித்து ஒரு மாதத்திற்கு மேல் கருக்கலைப்பு செய்வது ஒரு பெண்ணின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கும்.

கருக்கலைப்பு பற்றிய முடிவெடுப்பதற்குமுன் கவனமாக இருக்கவேண்டும். கருக்கலைப்பு பெண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கிறது. வருங்காலத்தில் கர்ப்பமடைய விரும்பும் பெண்களுக்கு கருக்கலைப்பு மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் மருத்துவரிடமோ, ஆலோசகரிடமோ அல்லது உங்கள் குடும்பத்தில் நம்பகமான நபரிடமோ ஆலோசிக்க வேண்டும்.

எனினும், கர்ப்பத்தின் பின்னர் கருக்கலைப்பை தவிர்க்க சில வழிகள் இருக்கின்றன. பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் கருவின் வயது மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பொறுத்து, சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதத்திற்குள் இயற்கையான பொருட்களால் கருக்கலைப்பு (Abortion with natural ingredients available within a month)

சில உணவுபொருட்களை உட்கொள்வதன்மூலம் இயற்கையாக கருக்கலைப்பு ஏற்படலாம். இருப்பினும், இந்த உணவுபொருட்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவை அல்ல.

பப்பாளி (Papaya)

பப்பாளியில் பைட்டோகெமிக்கல்ஸ் உள்ளது. பப்பாளி புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் செயல்பாடுகளை அதிக அளவு தடுக்கிறது.ஆக்ஸிடோசின் மற்றும் புரோஸ்டாக்லாண்டின்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, கர்ப்பகாலத்தில் பப்பாளி சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு மாதம் கழித்து கர்ப்பத்தைத் தடுக்க மற்றும் கருக்கலைப்பை தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த பப்பாளி பழங்களை தாராளமாக உண்ணலாம்.

அன்னாசி (Pineapple)

அன்னாசிப்பழங்கள் புரோட்டியோலிடிக் என்சைம்களால்  நிறைந்துள்ளன. இவை பொதுவாக ப்ரோமெலைன் எனப்படும். ப்ரோமெலைன் கருப்பை வாயை மென்மையாக்கும். அன்னாசிப்பழத்தின் இந்த தன்மை  இயற்கை கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.இது ஒரு மாத கர்ப்பத்திற்கு பின்னர் இயற்கையாகவே கருக்கலைப்பை நிறுத்த உதவும்.

இலவங்கப்பட்டை (Cinnamon)

கருப்பையை உந்துவதில் உதவுவதால் கச்சா இலவங்கப்பட்டையை உண்பது பரிந்துரைக்கப்படுகிறது. உடலுறவு கொண்ட ஒரு மாதத்திற்குள் இலவங்கப்பட்டையை அதிகளவு உட்கொண்டால், அது கருக்கலைப்பு இயல்பாக நடக்க வழிவகுக்கலாம்.

எள் விதைகள் (Sesame seeds)

உடலுறவுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு எள்விதைகள் உட்கொள்ளும் வழக்கத்தை  கொண்டால் இயற்கை கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே இரவில் சில எள்விதைகளை ஊறவைத்து அடுத்த நாள் காலை உண்ணலாம். தேனில் சில எள்விதைகள் கலந்து ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

கெமோமில் தேநீர் (Chamomile tea)

கெமோமில் தேநீர் அதிகமாக உட்கொள்வது கருக்கலைப்பு செய்வதில் உதவுகிறது, நீங்கள் இரத்தப்போக்கு தொடங்கும் வரை ஒரு வழக்கமான அடிப்படையில் கெமோமில் தேநீர் சாப்பிட வேண்டும். கெமோமில் தேநீரை சில நிமிடம் தண்ணீரில் கொதிக்கவிட்டு சாப்பிடவும்.

வோக்கோசு (Parsley)

கருப்பை சுருக்கங்களை ஊக்கப்படுத்துவதில் வோக்கோசு இயற்கையாகவே கருக்கலைப்பை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

ஒரு மாதத்திற்குள் கருக்கலைப்பு ஏற்பட பிற இயற்கை வழிகள் (Other natural ways of aborting within a month)

சூடான தண்ணீர் குளியல் (Hot water bath)

இயற்கை முறையில் கருக்கலைப்பு செய்வதற்கு, நீங்கள்  மிகவும் சூடான தண்ணீரைக்கொண்டு குளிக்க வேண்டும்.

அடிக்கடி செக்ஸ் (Frequent sex)

கர்ப்பகாலகட்டங்களில் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால், கருவுக்கு தீங்குவிளைவிப்பதாக அறியப்படுகிறது.விந்துகளில் உள்ள புரோஸ்டாக்ளாண்டின்கள் கரு வளர்ச்சியை தடுக்கின்றன.

அறுவை சிகிச்சை கருக்கலைப்பு (Surgical abortion)

வீட்டுவைத்திய கருக்கலைப்பு சிகிச்சைகள் பயனற்றதாக  இருப்பின், பெண்கள் மருத்துவ கருக்கலைப்பு நடைமுறைக்கு உட்பட வேண்டும். மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான  இரண்டு நடைமுறைகள்:எம்.வி.ஏ மற்றும் டி&இ.

கருப்பை உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான செயல்முறை இந்த இரண்டு உத்திகளுக்கும் பொது. கர்ப்பத்தின் 12 வாரங்களுக்குள் எம்.வி.ஏ,கர்ப்பத்தின் 13வது வாரத்திற்கு பிறகு டி&இ.

இது 10-15 நிமிட நடைமுறை.மயக்க மருந்து நிபுணர் கர்ப்பப்பையை திறப்பதற்காக ஒரு குழாயினைச் சேர்க்கிறார். இதனால், உறிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி கருப்பையை காலி செய்ய உதவுகிறது.

சுரண்டுவதன் மூலம் கருக்கலைப்பு (Abortion by scraping)

இந்த முறையில், மயக்கமருந்து கொடுக்கப்பட்டு கூர்மையான கருவி பயன்படுத்தப்படுகிறது.10-15 நிமிடங்கள் ஆகும். கருப்பைவாயை அகட்டி கருப்பைக்குள் செலுத்தி முதல் மாதத்தில் கருக்கலைப்பிற்கு  இம்முறை செய்யப்படும்.

கருக்கலைப்புக்கு பிறகு பெண்கள் எதிர்நோக்கும் சில அறிகுறிகள் (Symptoms post abortion that women commonly face)

தோல் அரிப்பு (Itchy skin)

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில்,மார்பகங்களிலும், வயிற்றிலும்கூட அரிப்பு ஏற்படலாம்.

களைப்பு (Fatigue)

உங்கள் இதயம் உங்கள் கருப்பைக்கு கூடுதல் ஆக்ஸிஜனை வழங்குவதால் களைப்பு ஏற்படுகிறது. நிறைய தண்ணீர் குடிப்பது இதற்கு நிவாரணம்.

தலைவலி (Headaches)

உடலில் புரோஜெஸ்டெரோன் அதிகமாக இருப்பதாலும், ரத்தசோகை இருப்பதாலும் கர்ப்பிணிக்கு தலைவலி வரும்.

குமட்டல் (Nausea)

ஹுமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் என்று அழைக்கப்படும் ஹார்மோனால் குமட்டல் ஏற்படக்கூடும் .  புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மலச்சிக்கல் மற்றும் உணவின்மீது வெறுப்பை ஏற்படுத்தும்.

இரத்தப்போக்கு (Bleeding)

கருக்கலைப்புக்குப் பிறகு கருப்பையிலிருந்து பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. ரத்தப்போக்கு நிற்காமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவஉதவியை நாட வேண்டும்.

வலி (Pain)

வலிகளும் பிடிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது  நல்லது.

உணர்ச்சி தடுமாற்றம் (Emotional dysfunction)

கருக்கலைப்பிற்கு பிறகு பெண்கள் மனச்சோர்வாகவும் சோகமாகவும் இருக்கக்கூடும்.

கருக்கலைப்பிற்குப பிறகு தவறாமல் செய்யவேண்டியவை (Must do’s after abortion)

  • நிறைய திரவஉணவுகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்
  • பல்வேறு விட்டமின்கள், அயர்ன் மற்றும் ப்ரோடீன்கள் நிறைந்த சரிவிகித உணவு வேண்டும்
  • 15 பவுண்டுகள் கொண்ட எதையும் தூக்க முயற்சிக்காமல் இரண்டு வாரங்களாவது இருக்க வேண்டும்.
  • சில நாட்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்
  • இரண்டு வாரங்களுக்காவது நீந்துதல் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது
  • உங்கள் யோனியை பாதிப்புள்ளாக்கும் எதுவும் செய்யக்கூடாது.
  • மனமும் உடலும் தெம்படையும் வரையில் உடலுறவை தவிர்க்கவேண்டும்.

மருந்துகளால் கருக்கலைப்பு (Medical method)

மைப்பிரிஸ்டோன்  மற்றும் மேதோட்ரேக்க்ஸ்யேட்  1 மாதத்திற்கு பிறகு கர்ப்பம் முடிக்க மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளாகும் . மைப்பிரிஸ்டோன் ப்ரோஜெஸ்ட்டரோனுடன் இணைந்து செயல்பட்டு, கருவை அழிக்க உதவுகிறது. மேதோட்ரேக்க்ஸ்யேட் நச்சு இரசாயனம் ஆகும், இது கருவின் உயிரணுக்களைத் தாக்குகிறது,.

செயல்முறை (The process)

  1. கைனெகாலஜிஸ்டை 3 முறையாவது சந்திக்க வேண்டும்.
  2. முதலில் மைப்பிரிஸ்டோன் வழங்கப்படும்
  3. இதனால் கருப்பையில் பிடிப்புகள் வரும்.
  4. ரத்தப்போக்கும் அதிகம் இருக்கும்

இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாதவர்கள் (Warning):

  • 35 வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • கர்ப்பமாகி 1 மாதமானவர்கள்
  • புகைப்பவர்கள்

உப்புத்தண்ணீர் முறை (Saline water method)

உப்புத்தண்ணீரை கருப்பைக்குள் செலுத்துவதால் கருக்கலைப்பு.

ப்ரோஸ்டாகிளாண்டின் முறை (Prostaglandin method)

ஹார்மோன்களை கருப்பைக்குள் செலுத்துவதால் கருக்கலைப்பு.

ரசாயனமுறை (Chemical method)

சைகோட்டை கருப்பையின் சுவற்றில் செலுத்தும் இம்முறையால் ஆணின் விந்து கருப்பையை அடையாமல் தடுத்து அதனால் கர்ப்பமடைவதை தவிர்க்கமுடியும். வேறு வழியே இல்லாத நிலையில்தான் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த முறையை கையாளவேண்டும்.

மூலிகை முறை (Herbal abortion)

யாரோ  மலர் போன்ற மூலிகைகளை பயன்படுத்தி கருச்சிதைவை செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு மேலான கர்ப்பிணிக்கு இந்த கருக்கலைப்பு முறை உகந்ததல்ல.

மாத்திரைகள் மூலமாக (Taking pills)

மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை மாத்திரைகளை 63 நாட்கள் முதல் 9 வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத்திரைகள் மூலம் கருத்தடைக்கு 98% உத்திரவாதம் இருந்தாலும் பல பக்கவிளைவுகளும் இருப்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றவேண்டும்.