Tamil tips for pimple and acne rashes – கூந்தல் மற்றும் முகப்பரு தடிப்புகள் குறிப்புகள்

நாம் எல்லோரும் பருக்கள் மற்றும் தடிப்புகள் நம் சருமத்தில் வருவதை மிகவும் வெறுக்கிறோம். திடீரென பருக்கள் உருவாகி சருமத்தை, முகத்தை அசிங்கமாக்கிவிடுவது ஒரு எரிச்சலான விசயம். இதில் முக்கியமான விசயம் என்னவெனில் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு என்பதே இல்லை. அப்படியெனில் இப்படி திடீரென வரும் பருக்களை நீக்குவதற்கு என்ன வழி. இதோ சில வீட்டுக் குறிப்புகள் இதன் மூலம் இத்தகையை பருக்கள், தடிப்புகளை எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் நீக்கமுடியும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டு மருத்துவக் குறிப்புகளைப் பயன்படுத்தத் தேவைப்படும் பொருட்களும் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடியவை. இந்த வீட்டுக் குறிப்புகள் மூலம் இத்ததைகய பருக்கள் மற்றும் தடிப்புகள் மறைய சற்று காலம் எடுத்தாலும் பல்வேறு நச்சுத்தன்மை வேதிப்பொருட்கள் கலந்த சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை விட மிக பாதுகாப்பானது.

பருக்கள் மற்றும் தடிப்புகளை நீக்க சிறந்த வீட்டு மருத்துவக் குறிப்புகள் (Best home remedies to eliminate pimple rashes and acne rashes)

  • வைட்டமீன் ஏ மற்றும் சி நிறைந்த உணவுப் பொருட்கள்: சருமத்தில், முகத்தில் இத்தகைய பருக்கள், தடிப்புகள் வர ஒரு காரணம் உடலில் வைட்டமீன் ஏ மற்றும் சி குறைபாடாகும். உணவில் இத்ததகைய வைட்டமீன்கள் இல்லையெனில் சருமப் பிரச்சனைகளுடன் மற்ற நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, உணவில் எல்லா வைட்டமீன் மற்றும் தாதுப்பொருட்களும் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கேரட், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுபழ சாறுகள் தினமும் அருந்தலாம். இவை உடலில் நச்சுக்களை வெளியேற்றும்.
  • ஆரோக்கியமான மற்றும் சுத்தமான வாழ்க்கை முறை: மற்றொரு முக்கியமான விசயம் நீங்கள் எந்தமாதிரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறீர்கள் என்பது, நல்ல ஆரோக்கியமான சுத்தமான வாழ்க்கைமுறையாக உங்கள் வாழ்க்கை இருக்கவேண்டும். உடல் சுத்தம் என்பது மிக இன்றியமையாதது, முறையாக சருமத்தை சுத்தப்படுத்தினால்தான் நச்சுகள், பாக்டீரியாக்கள் மற்றும் இதர நுண்ணுயிர்கள் வெளியேறும் ஏனெனில் இவைகளால் தான் சருமத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்படுகின்றன.
  • ஜுஜுபா எண்ணைய் மசாஜ்: வைட்டமீன் ஈ அதிகமுள்ள ஜுஜுபா எண்ணைய் சருமத்திற்கு மிக ஏற்றது. சில துளிகள் இந்த எண்ணையை கையில் எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும். சில நாட்கள் இப்படி தொடர்ந்து தடவி வரும்போது நல்ல பலன் கிடைக்கும்.
  • முடிந்த அளவு மனஇறுக்கம், மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து உங்களை நீங்களே தவிர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் ஏற்பட்டால் அது உடலின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் அதனால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • வேப்பிலை, மஞ்சள், கற்றாழை மற்றும் தேன் ஆகியவற்றை சேரத்து ஒரு கலவை தயாரித்துக்கொள்ளலாம். இதை உடல் முழுவதுமே தேய்த்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 தடவை இப்படி செய்யலாம் நல்ல முன்னேற்றம் சருமத்தில் தெரியும்.
  • செயற்கை, வேதிப் பொருட்கள் கொண்ட சந்தைகளில் கிடைக்கும் சரும பராமிரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

ஓட்ஸ் சிகிச்சை (Oatmeal rash treatment)

வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் ஓட்ஸ் கலந்து ஊறவைத்து தடிப்புகள் வந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். தடிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்பிரின் (Aspirin)

இது கொஞ்சம் புதுமையாக வித்தியாசமாகத் தெரியும் ஆனால் எரிச்சல், சருமம் சிவப்பாகுதல் போன்றவற்றை குணமாக்கும். இந்த ஆஸ்பிரின் மாத்திரையை நன்கு பொடியாக்கி சில துளி நீர் சேர்த்து ஒரு இரவு வரை விட்டு பின் இந்த பசைபோல் இருப்பதை சருமத்தில் தடவலாம்.

முட்டை வெள்ளைக்கரு (Egg-whites)

புரதச்சத்து அதிகமுள்ளது இந்த முட்டை என்பது நமக்குத் தெரியும். இதை நாம் பருக்களை போக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

காலமைன் கரைசல் (Calamin solution)

உங்கள் சருமத்தில் பருக்கள், தடிப்புகள் இருந்தால் காலமைன் கரைசல் கொண்டு சரியாக்கலாம். ஆய்வக முடிவுகளும் காலமைன் பயன்படுத்துவதால் முகத்திற்கு ஆரோக்கியம் கூடுகிறது என்றே கூறுகின்றன.

புதினா (Peppermint)

சருமத்தில் எரிச்சல், சிவப்பு தடிப்புகள் ஏற்படுதல் போன்றவற்றை இதைக்கொண்டு சரி செய்யலாம். இதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

துளசி இலை (Basil leaves)

ஏதாவது ஒரு முக்கியமான விழா, நிகழ்ச்சி உங்களுக்கு இருந்தால், துளசி இலை விரைவாக சரும தடிப்புகளை சரிசெய்ய ஏற்றது. சில துளசி இலைகளை நீரில் போட்டு 15-20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின் ஒரு பஞ்சை அந்த நீரில் நனைத்து தடிப்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். ஒரே இரவில் சருமத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பச்சை தேயிலை ஐஸ்கட்டி (Green tea ice cubes)

பச்சை தேயிலை உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று என்பது நம்மில் பலபேருக்குத் தெரியும். பச்சை தேயிலை நிரை ஒரு ட்ரேயில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து ஐஸ்கட்டியாக்கி பின்னர் அந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடிப்புகள் உள்ள இடத்தில் வைத்து தடவலாம்.

கற்றாழை ஜெல் (Aloe vera gel)

சரும பராமரிப்பில் கற்றாழை ஜெல்லின் பங்கு அளப்பரியது. நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் இதில் உள்ளது. பல வகை சரும அரிப்பு, தடிப்பு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த ஒன்று இந்த கற்றாழை ஜெல்.

பேக்கிங் சோடா (Baking soda)

சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளைக் குணமாக்குவதில் பேக்கிங் சோடா மிக முக்கியமான ஒன்று. பேக்கிங் சோடாவுடன் சில துளி நீர் சேர்த்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவ வேண்டியதுதான். 10-15 நிமிடங்கள் விட்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்

வேம்பு (Neem)

நுண்ணுயிர் கொல்லியாக வேம்பின் மகத்துவம் அலாதியானது. சருமத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து அழிக்கிறது. வேப்பிலைகளை பசைபோலாக்கி முகத்தில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் விட்டு பின்னர் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். உங்கள் சருமம் மூச்சுவிடுவதை நீங்கள் உணர முடியும்.

தேயிலை மர எண்ணைய் (Tea tree oil)

மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக இந்த எண்ணைய் இருக்கிறது. முகத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் பருக்கள் வந்து உடைந்து அந்த இடம் சிவப்பு தடிப்பாக மாறுவதையும் குணமாக்குகிறது. ஒரு பஞ்சை இந்த எண்ணையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவிக் கொள்ளலாம். தினமும் இப்படி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு (Lemon juice)

பல காலமாக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவக் குறிப்பு இது. எலுமிச்சையை சாறு பிழிந்து அதில் ஒரு பஞ்சை நனைத்து பருக்கள், தடிப்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தடவிய உடன் சிறிது எரிச்சல் காந்தல் இருக்கலாம் ஆனால் விரைவாக பருக்களை குணமாக்கும். இதனோடு சில துளி பன்னீர் சேர்த்தும் பயன்படுத்தலாம். முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை விட்டு பின் கழுவிக் கொள்ளலாம்.

பூண்டு (Apply garlic)

பூண்டும் பருக்களை குணமாக்குவதில் சிறந்த பொருள்தான். பூண்டின் ஒரு முக்கிய பொருளாக சல்பர் உள்ளது இது பருக்கள் உண்டாக்கும் பாக்டிரியாக்களை எதிர்த்து செயல்படுகிறது.

நீராவி பிடித்தல் (Steam time)

நீராவி பிடிப்பது மிக எளிமையான எந்த செலவும் இல்லாத ஒரு முறை. முகத்திற்கு நீராவி பிடிப்பது சருமத்திற்கு மிக ஆரோக்கியமானது. இப்படி நீராவி பிடிப்பதால் முகத்தில் உள்ள தோலின் துளைகள் அடைபட்டிருப்பது திறக்கப்படுகிறது. அதிகமான எண்ணைப்பிசுப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலின் வியர்வை சுரப்பிகள் மூடியிருப்பதை திறக்கும். ஆகவே, அடிக்கடி நீராவியில் முகத்தைக் காட்ட வேண்டும்

பட்டை பொடி தேன் (Cinnamon powder with honey for sking rash)

எல்லோருடைய சமையலறையிலும் பட்டை மற்றும் தேன் கண்டிப்பாக இருக்கும். சில பட்டைகுச்சிகளை பொடியாக்கி அதில் சில துளி தேன் சேர்த்து குழைத்து இரவில் தூங்கச் செல்லும்முன் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளவேண்டும். தினமும் இப்படி செய்துவரும்போது முகத்தில் பருக்கள் தடிப்புகள் காணாமல் போகும்.

பற்பசையின் பயன் (How to remove pimple rashes with toothpaste)

பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் இருக்கும் ஒரு பொருளின் பலன் பற்றித் தெரியாது அது முகப்பருக்களை நீக்கும் தன்மைகொண்டது. பற்பசையை கொஞ்சம் எடுத்து பருக்கள் தடிப்புகள் உள்ள இடத்தில் தடவிக்கொள்ளுங்கள். இரவு உறங்கச் செல்லும்முன் தடவி மறுநாள் காலையில் கழுவிக்கொள்ளலாம். எப்போதவது ஒருதடவை இப்படி செய்தால் பலன் இருக்காது. வழக்கமாக செய்து வரவேண்டும்.

குறிப்பு: ஆனால் சில சருமங்களுக்கு இது ஒத்துவராது. ஆகவே, முதலில் ஒரு சோதனைக்கு ஒரு நாள் பயன்படுத்தப் பார்க்கலாம்.

வினிகர் பயன்பாடு (Vinegar to treat acne rashes)

வினிகர் பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் அவரகள் சமையலறையில் வினிகர் வைத்திருப்பார்கள். இந்த வினிகரை சிறிதளவு எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். இது உங்கள் முகத்தில் பருக்கள் தடிப்புகள் வருவதைத் தடுக்கும்.

பழுத்த தக்காளியின் பயன் (Ripe tomatoes for pimple rashes)

நன்கு பழுத்த ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி அதிலுள்ள உட்பகுதியை எடுத்து முகத்தில் தடவவேண்டும். 1 மணிநேரம் பிறகு நீரினால் கழுவிக் கொள்ளவேண்டும். வாரத்திற்கு 2 தடவை இதைச் செய்து வந்தால் சருமம் சுத்தமாகி பருக்கள் அற்ற முகம் பெறலாம்.