BIKINI KARUPU KODU NEEKUTHAL – பிகினியால் ஏற்பட்ட கருப்புக் கோடு நீக்கும் வழிகள்

இதோ நீச்சலுக்கான பருவநிலை வந்துவிட்டது. உங்களின் எல்லா பிகினி உடைகளையும் எடுக்கவேண்டிய தருணம். ஆனால் பிகினியால் உடலில் ஏற்பட்டுள்ள கோடுகளை நீக்க என்ன செய்ய? அத்தகைய கருப்பு கோடுகளை நீக்க க்ரீம் பயன்படுத்த முடியாத ஆட்களா நீங்கள், க்ரீம் பயன்படுத்தினால் அலர்ஜி வருமா உங்களுக்கு? அப்படியானால் இதோ உங்களுக்கு சில வீட்டு வைத்திய குறிப்புகள்.

உங்களை கவர்ச்சியாக காட்டுவதில் நிச்சயம் பிகினிக்கு ஒரு இடம் உண்டு என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். ஆனால் பிகினி உடையணிந்தால் உடலில் கருப்பு கோடுகள் விழுகின்றதா. இத்தகைய பிகினி கருப்பு கோடுகள் ஏற்பட வியர்வை, அரிப்பு சவரம் செய்தல் என பல காரணங்கள் உண்டு. எத்தனையோக க்ரீம்கள் சந்தைகளில் கிடைத்தாலும் இதோ சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இதற்காகவே உள்ளன.

பொதுவாக பெண்களுக்கு தங்கள் பெண்ணுறுப்பு அருகில்தான் இத்தகைய கோடுகள் ஏற்படும். பெண்களும் இதை தங்கள் ஆண் துணை தவிர மற்றவர்களிடமோ, இடங்களிலேயோ காட்டப்போவதில்லை. ஆனால், நடிகைகள், மாடல்கள் போன்றவர்கள் புகைப்படதொகுப்பிற்காக பிகினி உடையோடு காட்சியளிக்க வேண்டியுள்ளது. ஆகவே அத்தகைய கருப்பு கோடுகளை நீக்க இதோ சில குறிப்புகள்.

பிகினி கருப்பு கோடுகள் ஏற்பட காரணம்? (What causes dark bikini lines?)

உரசுதல் (Chafing)

சற்று உடல் பருமனான பெண்களுக்கு மேல்தொடை பருமனாக இருக்கும். அத்தகையவர்களுக்கு பெண்ணுறுப்பு அருகில் உரசுதல் காரணமாக கருப்பு கோடுகள் ஏற்படும். இரண்டு தொடையும் உரசுவதால் சரும மேற்பரப்புசெல்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் கருப்பு கோடுகள் ஏற்படுகிறது.

பாலியஸ்டர் ஆடைகள் (Polyester outfits)

பாலியஸ்டர் துணிகள் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இதனால் பிகிணி அணியும் சருமப் பகுதிகளில் எபிடெரிமிஸ் பாதிக்கப்படுகிறது. நீங்கள் சற்று சதைபோட்டவராக இருந்தால் இத்தகைய பாலியஸ்டர் ஆடைகளைத் தவிருங்கள். பொதுவாகவே பாலியஸ்டர் துணிகள் உடல் சருமத்திற்கு ஏற்றதல்ல.

டியோடரண்ட் (Deodorants)

பெண்ணுறுப்பு பகுதிகளில் வரும் நாற்றத்தை நீக்க டியோடரண்ட் உதவும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அப்படி ஸ்ப்ரே டியோடரண்ட் பயன்படுத்தினால் கொஞ்ச நேரத்திற்கு நாற்றம் வராமல் இருக்கலாம். ஆனால் இப்படி ஸ்ப்ரே அடிப்பதால் கருப்பு கோடுகள் பெண்ணுறுப்பை சுற்றி ஏற்படுகிறது.

முடிகளை நீக்குதல் (Hair removal)

பெண்ணுறுப்பு சுற்றியுள்ள முடிகளை சவரம் செய்யும்போதும் அந்த இடங்கள் எளிதில் கருத்துவிடுகின்றன. ஆகவே, அப்படி சவரம் செய்யும் போது வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை விட சில இயற்கையான அல்லது வீட்டு மருத்துவ குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பிகினி கருப்பு கோடுகளை குறைக்கும் வழிகள் (Homemade remedies to lighten dark bikini line)

ஆஸ்ப்ரின் பேஸ்ட் (Aspirin paste)

2 ஆஸ்ப்ரின் மாத்திரைகளை எடுத்து நீர் சேர்த்து குழைத்து பேஸ்ட் ஆக்கி அதை கருப்பு கோடுகள் மேல் தடவ வேண்டும். இது அத்தகைய கருப்பு கோடுகளை நீக்கும். இதை ஆண்களும் முயற்சித்து தங்களின் மறைவான பகுதிகளில் உள்ள கருமையைக் குறைக்கலாம். வாரத்திற்கு 2 முறை இதை முயற்சியுங்கள்.

தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு (Honey and Lemon juice)

1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை கருப்புகோடுகள் இருக்கும் இடத்தில் தடவி தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்து 10-15 நிமிடங்கள் விட்டு பின் நீரினால் கழுவிக் கொள்ளலாம். இது கருமையைக் குறைக்கும்.

ஆரஞ்சுத் தோல் மற்றும் தேன் (Use the only orange peel and honey)

ஆரஞ்சுத் தோல்களை தூர எறியாமல் அதை சரும கருமையைப் போக்க பயன்படுத்தலாம். ஆரஞ்சுத் தோலில் வைட்டமீன் சி உள்ளது. ஆரஞ்சுத் தோலை உலர்த்தி நன்கு காய்ந்ததும் அதைப் பொடியாக்கி, அந்தப் பொடியுடன் நீர் கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இதனுடன் சில துளிகள் தேனும் சேர்க்கலாம். இந்தக் கலவையை பிகினி கருப்புக்கோடுகள் மீது தடவி 10 நிமிடங்கள் வரை விட்டு பின் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு 2 தடவை இதை முயற்சித்து கருமையைப் போக்கலாம்.

கடலை மாவு மற்றும் எலுமிச்சைச் சாறு (Gram flour scrub and lemon juice)

உங்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடிகளை நீக்குவதற்கு கடலைமாவு சிறந்த ஒன்று. 1 தேக்கரண்டி கடலைமாவுடன் 10 மிலி எலுமிச்சைச்சாறை ஊற்றி அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். இதை பிகினி பகுதியில் தடவ வேண்டும். முடிகளை நீக்க இது ஒரு சிறந்த முறை. பின்னர் நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். சில நாட்களிலேயே வித்தியாசம் தெரியும்.

வீட்டில் தயாரிக்கும் வேக்ஸ் (Natural homemade wax)

பல வேதிப்பொருட்கள் கலந்துள்ள சந்தைகளில் கிடைக்கும் வேக்ஸ்களை தூர ஒதுக்குங்கள். அவை, எரிச்சலையும், வீக்கத்தையும் இன்னும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு கிண்ணத்தில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து சூடாக்க வேண்டும். கருமையாக ஆகும்வரை சூடாக்கி இந்த பேஸ்ட்டை பிகினி பகுதிகளில் தடவி 10-15 நிமிடங்கள் உலரும் வரை பொறுத்து பின் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு 3 தடவை இப்படி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை வெள்ளைக்கரு மற்றும் சர்க்கரை (Egg white and sugar)

முட்டை வெள்ளைக்கரு மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஒரு பேஸ்ட் தயாரித்து அதை பிகினி கோடுகள் மேல் தடவி உலர விடுங்கள். உலர்ந்ததும் அதை அப்படியே எடுத்துவிட்டு பாருங்கள் மாற்றம் தெரியும்.

பாதாம் மற்றும் பால் (Almond and milk)

சில பாதாம் கொட்டைகளை அரைத்து அதனுடன் பால் சேர்த்து அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி நன்கு தேய்த்து வந்தால் கருமை குறையும்.

வெள்ளரி மற்றும் கற்றாழை பேஸ்ட் (Cucumber and Aloe vera paste)

வெள்ளரியுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து அதை கருமையாக பகுதிகளில் தடவவும். கற்றாழை ஜெல்லில் ஆண்டிஆக்ஸிடென்ட், ஆண்டிசெப்டிக் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உடலில் நச்சைக் குறைக்கவும் இது உதவுகிறது.

சமையல் சோடா பேஸ்ட் (Baking soda paste)

சமையல் சோடா சிறிது எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதை பிகினி கோடு பகுதிகளில் தடவி உலர விட வேண்டும். உலர்ந்ததும் கழுவி ஏதவாது மாஸ்ரைசர் தடவிக் கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணைய் (Essential olive oil)

கருப்பான பிகினி கோடுகளில் ஆலிவ் எண்ணைய் கொண்டு மசாஜ் செய்து ஒரு இரவு வரை விட்டுவிடவும். காலையில் எழுந்த கழுவிக் கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள், எலுமிச்சைச்சாறு மற்றும் தயிர் (Turmeric, lemon juice and yogurt paste)

1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 2 தேக்கரண்டி எலுமிச்சை்சாறு மற்றும் 1 தேக்கரண்டி தயிர் கலந்து பேஸ்ட் செய்து கருப்பான இடங்களில் தடவி மசாஜ் செய்யவும். பின் 10 -15 நிமிடங்கள் விட்டு சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம்.

புதினா இலை மற்றும் தேன் (Mint leaves and honey)

புதினா இலையை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கருமையான இடங்களில் தடவவும். சில நாட்களிலேயே வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

சந்தனம் (Sandalwood remedy)

இன்று பல சரும பிரச்சனைகளுக்கு மக்கள் சந்தனத்தைப் பயன்படுத்துகின்றனர். சந்தனப்பொடியை நீரில் குழைத்து அதை பிகினி கருமை கோடுகள் மீது தடவி வந்தால் கருமை குறையும்.

உருளைக்கிழங்கு (Potato)

உருளையை துண்டாக வெட்டி அதை கருமை இருக்கும் பகுதிகளில் தேய்க்க வேண்டும்.