MUGATHIL KARUPPU THITTU NEENGA – இயற்கையான முறையில் முகத்தில் கருந்திட்டுக்களைப் போக்குவது எப்படி

ஒருவருக்கு முதன்மையான ஒரு அடையாளம் என்பது அவரது முகம்தான். ஒருவர் நேர்காணலில் இருக்கும்போது அவரின் முகத்தை வைத்தே பல விசயங்களை நேர்காணல் செய்பவர் அறிந்து கொள்வார்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பெண்களுக்கு முகத்தில் கருந்திட்டுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.  அத்தகைய கருந்திட்டுகளை சில எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகள் மூலம் நீக்க முடியும்.

பொதுவாக ஒரே சீரான நிறமுடைய முகத்தில் ஆங்காங்கே கருமையான திட்டுகள் அல்லது கரும் புள்ளிகளாக இருப்பது அசௌகரியமாக உணர வைக்கும்.  சூரிய ஒளி நேரடியாக படுதல், மெலாஸ்மா, பிக்மென்டேசன் மற்றும் பல காரணங்களால் இத்தகைய கருந்திட்டுகள் முகத்தில் ஏற்படுகின்றது.  சில பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் போது இத்தகைய கருந்திட்டுகள் முகத்தில் ஏற்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாட்டால் இப்படி ஏற்படலாம். முன்னர் எல்லாம் மத்திய வயதில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய கருந்திட்டுகள் இருப்பதாக பார்த்திருப்போம்  ஆனால் இக்காலத்தில் இளம் வயதுப் பெண்கள் கூட முகத்தில் கருந்திட்டுகள் கரும் புள்ளிகள் வந்து தொந்தரவு செய்கிறது என்று கவலைப்படுகிறார்கள். அதிலும் சருமம் வெண்மையாக இருப்பவர்கள் முகத்தில் இத்தகைய கருந்திட்டுகள் வருவது சற்று அசிங்கமாக உணர வைக்கிறது. கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த களிம்புகள் மற்ற பொருட்களைப் பயன்படுத்துவதை விட, இந்த கருந்திட்டுகளை நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள் (Home remedies for dark patches on face & cheecks)

புளிப்பு பழங்கள் (Citrus fruits)

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அருமையான சுவையைத் தருவதோடு  தோல் சம்பந்தமான சில நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகவும் இருக்கின்றது.  தோல் வீக்கம், இறந்த செல்களை நீக்குதல், நச்சுத் தன்மையை நீக்குதல், சருமத்தைப் புதுப்பித்தல் , கருந்திட்டுகளை நீக்குதல் என பல வகைகளில் உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இத்தகைய சிட்ரஸ் பழங்களின் சாறைப் பிழிந்து எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து உலர்ந்தபின் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 தடவை இப்படி செய்யலாம்.  சிட்ரஸ் பழச்சாறு குடிப்பதையும் வழக்கமாக வைத்தக் கொள்ள வேண்டும்.

தேன் (Honey)

சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகளை நீக்க, தேன் பயன்படுத்தலாம். சிறிதளவு தேனை எடுத்து மிதமாக சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் வரை விட்டு பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன்னர் இதைச் செ்ய்வது இன்னும் சிறந்தது.

உருளை மற்றும் தேன் (Potato and honey paste)

ஒரு உருளைக்கிழங்கை உரித்து கூழ் போல் நன்கு பிசைந்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சைப்பழ சாறு மற்றும் சிறிதளவு மஞ்சள் மற்றும் சில துளிகள் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். உலரும் வரை அப்படியே விட்டுவிட்டு பின் பன்னீர் கொஞ்சம் எடுத்து தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வாருங்கள்.

சிவப்பு வெங்காயம் (Red onion paste)

சிவப்பு வெங்காயத்தில் உள்ள அமிலத்தன்மை இத்தகைய கருந்திட்டுகளை நீக்க உதவுகிறது.  ஒரு சிவப்பு வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அதை கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும், 15 நிமிடங்கள் வரை விட்டு பின் உலர்ந்ததும் முகத்தை நன்கு கழவிக் கொள்ளலாம்.  ஒரு மாதம் வரை தொடர்ந்து இதைச் செய்து வாருங்கள், முகத்தில் கருந்திட்டுகள் மறையும்.

தேசிப்பழம் (Lime)

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் தேசிப்பழச்சாறு குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு தேசிப்பழத்தை வட்ட துண்டுகளாக சீவி கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் 15 நிமிடங்கள் வரை வைத்து தேய்க்கலாம். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.

கடலை மாவு & புளி (Gram flour & tamarind powder)

1 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி புளி பொடியாக்கியது. இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு பன்னீர் சேர்த்து பசை போல் ஆக்கிக் கொள்ளவும். முகத்தில் கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் இதனை தடவி 15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம்.

புளித்த பாலாடை மற்றும் மஞ்சள் (Sour cream and turmeric)

காய்ச்சாத பால் புளித்த பின் கிடைக்கும் க்ரீம் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு, கிளிசரின் சோப் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். மஞ்சள் பூஞ்சை எதிர்ப்பு பொருளாக செயல்படும்.

தேன், எலுமிச்சை மற்றும் பால் (Honey, lemon juice and milk)

1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, 1 தேக்கரண்டி பால் மற்றும் இதனுடன் அரைத் தேக்கரண்டி பாதாம் எண்ணைய். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மென்மையான பசைபோல் ஆக்கி கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை விட்டு பின் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சைச் சாறு மற்றும் தக்காளி (Lemon juice and tomato pulp)

சருமத்தை வெண்மையாக்கும் தன்மை கொண்ட ஒரு பழம்தான் எலுமிச்சை. 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் 1 தேக்கரண்டி தக்காளிக் கூழ்மம் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டம். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்

தயிர் மற்றும் ஆரஞ்சு சாறு ( Yogurt and orange juice)

1 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு அல்லது ஆரஞ்சு சாறு, இரண்டையும் நன்கு கலந்து  முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவிக் கொள்ளலாம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு ஆரோக்கியமானது. வெறும் தயிரையும் முகத்தில் தடவலாம்.

ஆரஞ்சு/ தக்காளிச் சாறு (Orange / tomato juice)

ஆரஞ்சு மற்றும் தக்காளி கருமை நிற சருமம் கொண்டவர்களுக்கு மிக நல்லது. நன்கு மசித்த தக்காளி அல்லது ஆரஞ்சு சாறை எடுத்து முகத்தில் கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி பின் 10 நிமிடங்கள் கழித்து கழவிக் கொள்ளலாம். சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமீன் சி சருமத்திற்கு மிக நல்லது கருந்திட்டுகளை நீக்கும்.

கொண்டைக்கடலை (Chickpeas)

உங்கள் முகத்தில் இருக்கம் கருப்புதிட்டுகளை நீக்குவதில் கொண்டைக்டலை மிகச் சிறந்தது.  கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசிய தாதுப்பொருள் சரும செல்களைப் புதுப்பிக்கிறது மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. கொண்டைக்கடலையை நன்கு அவித்து மென்மையாக அரைத்து முகத்தில் பூசிக் கொள்ளவும். தினமு் இப்படி செய்து வந்து முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கோடுகள் போன்றவைகளைப் போக்கி பளபளப்பான முகத்தைப் பெறுங்கள்.

கற்றாழை (Aloe vera)

சருமத்தில் உள்ள கசடுகளை நீக்குவதில் கற்றாழை மிகச் சிறந்த ஒன்று.  கற்றாழை ஜெல் எடுத்து அதை கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளலாம். சிறிது நேரத்தில் ஜெல் உறைந்து இறுக்கமான உணர்வு தெரியும். பின்னர் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் (Apple cider vinegar)

முகத்தில் உள்ள கருந்தட்டுகளை நீக்குவதில் ஆப்பிள் சீடர் வினிகரும் சிறந்தது.  நீரில் ஆப்பில் சீடர் வினிகர் கலந்து கொஞ்சம் தேனும் கலந்து முகத்தில் தடவி உலரும் வரை விட்டுவிட வேண்டும். பின்னர் கழுவிக் கொள்ளலாம். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்யலாம்.  அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை ஆரஞ்சு சாறுடன் கலந்தும் தடவலாம்.

ஓட்ஸ் (Oatmeal)

ஒட்ஸ் மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. ஓட்ஸ் மாவை தேன் அல்லது பாலில் குழைத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். இது கருந்திட்டுகள் கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

வைட்டமீன் E (Vitamin E)

வைட்டமீன் E மாத்திரைகளின் உள்ளே இருக்கும் பொடியை வெளியே எடுத்து அதை முகத்தை கழுவிய பின்பு ஈரமாக இருக்கும் நிலையில் தடவி மசாஜ் செய்யலாம்.

பாதாம் எண்ணைய் (Almond oil)

பாதாம் எண்ணையின் பலன் அதிகமானது. ஒலெக் அமிலம், பைட்டோஸ்ட்ரால், வைட்டமீன் A, B2, B6, D, மற்றும் E நிறைந்து உள்ளது இந்த எண்ணையில். இந்த எண்ணையை சிறிது கையில் எடுத்து முகத்தில்  தடவி பின்னர் உலர்ந்ததும் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

விளக்கெண்ணைய் (How to lighten dark patches on face with castor oil)

முகத்தில் உள்ள கருந்திட்டுகளை நீக்குதில் விளக்கெண்ணையும் நல்ல பலன் தரும்.  ஒரு பஞ்சை விளக்கெண்ணையில் நனைத்து  கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

பப்பாளி (Papaya)

பப்பாளியில் பலவனை என்சைம்கள் உள்ளன இது சருமத்திற்கு மிக நல்லது. பப்பாளியைத் தோல் உரித்து நன்கு மசித்து முகத்தில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும். இது உங்கள் முகத்தை வெண்மையாக்கும் மற்றும் சுத்தமாக்கும். ஒரு நாளைக்கு 2 தடவை கூட இதைச் செய்யலாம்.

வெங்காயச் சாறு (Home remedy for black spots with onion juice)

வெங்காயச் சாறு எடுத்து அதை முகத்தில் தடவலாம் அல்லது வெங்காயத்தை வட்டத்துண்டாக வெட்டி முகத்தில் கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவலாம். வெள்ளை வெங்காயத்திற்கு பதில் சிவப்பு வெங்காயம் சிறந்தது. வெங்காயச் சாறுடன் 2 தேக்கரண்டி தேன் மற்றும் சில துளி எலுமிச்சைச் சாறு கலந்து அதையும் முகத்தில் தடவலாம். 15 நிமிடங்கள் வரை விட்டு பின் குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளலாம்.

பால் மோர் (Buttermilk home remedy for black spots)

பால் மோர் உலகின் எல்லாருடைய வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள்.  2 தேக்கரண்டி மோருடன் தக்காளியைப் பிழிந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ள வேண்டும்.